Tamil News
Home செய்திகள் செங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை கடற்படை – ஹூதி குழுவினருக்கு எதிராக அனுப்புவதாக ஜனாதிபதி அறிவிப்பு

செங்கடல் பாதுகாப்புக்கு இலங்கை கடற்படை – ஹூதி குழுவினருக்கு எதிராக அனுப்புவதாக ஜனாதிபதி அறிவிப்பு

செங்கடல் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இலங்கை கடற்படை கப்பலை அனுப்புவதற்கு உடன்பட்டுள்ளோம் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி நிலையத்தில் இடம்பெற்ற “ஷில்ப அபிமானி 2023” ஜனாதிபதி கைவினைப் பொருட்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

“உக்ரைன் போர் நடைபெறுகிறது. காசா போர் உள்ளது. அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கலாம்.
செங்கடலில் கப்பல்கள் மீது ஹதி குழுவினர் நடத்தும் தாக்குதல்களால் கப்பல் போக்குவரத்து ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளது. இந்தக் கப்பல்கள் செங்கடல் ஊடாக பயணிக்காமல் தென்னாபிரிக்காவின் ஊடாக சுற்றி வந்தால் அதன் மூலம் பொருட்களின் விலை அதிகரிக்கும்.

எனவே,ஹூதி நடவடிக்கைகளுக்கு எதிரான பாதுகாப்பு செயற்பாடுகளுக்கு ஆதரவாக இலங்கை கடற்படையின்
கப்பலை செங்கடலுக்கு அனுப்ப உடன்பட்டுள்ளோம்” எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version