Tamil News
Home செய்திகள் சுற்றுலாப் பயணிகளின் வருகை 70 விகிதத்தால் வீழ்ச்சி – நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் சிறீலங்கா

சுற்றுலாப் பயணிகளின் வருகை 70 விகிதத்தால் வீழ்ச்சி – நிதி நெருக்கடியை எதிர்நோக்கும் சிறீலங்கா

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சிறீலங்காவுக்கவுக்கு வருகைதந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை கடந்த மாதம் 70 விகிதத்தால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சிறீலங்காவின் சுற்றுலா மேம்பாட்டுத்துறைத் தலைவர் கிசோ ஹேம்ஸ் நேற்று (04) தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்பிரல் மாதம் இடம்பெற்ற தாக்குதல்களில் மூன்று ஆடம்பர விடுதிகள் தாக்குதலுக்கு உள்ளாகியதே இந்த வீழ்ச்சிக்குக் காரணம். அதன் பின்னர் பெருமளவான பயணிகள் சிறீலங்காவைத் தவிர்த்து வருகின்றனர்.

கடந்த வருடம் மே மாதம் 129,000 சுற்றுலாப் பயணிகள் வருகைதந்திருந்த போதும், இந்த வருடம் மே மாதம் 37,000 பயணிகளே சிறீலங்காவுக்கு வந்திருந்தனர்.

இந்த வீழ்ச்சியானது ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் 30 தொடக்கம் 40 விகிதமாக குறைவடையலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவின் பிரதான வருமானத் துறையான சுற்றுலாத்துறையின் வீழ்ச்சி சிறீலங்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version