Home செய்திகள் சுயநிர்ணய அடிப்படையில் தமிழருக்கான தீர்வு அவசியம் – அமெரிக்க அரசை வலியுறுத்துமாறு கஜேந்திரகுமாா் கோரிக்கை

சுயநிர்ணய அடிப்படையில் தமிழருக்கான தீர்வு அவசியம் – அமெரிக்க அரசை வலியுறுத்துமாறு கஜேந்திரகுமாா் கோரிக்கை

g1 சுயநிர்ணய அடிப்படையில் தமிழருக்கான தீர்வு அவசியம் - அமெரிக்க அரசை வலியுறுத்துமாறு கஜேந்திரகுமாா் கோரிக்கைஇலங்கை அரசை மாற்றியமைத்து இனப் பிரச்னைக்கு – தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே தீர்வை பெற்றுக்கொடுக்க அமெரிக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என்று தான் சந்தித்த அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் நால்வரிடம் வலியுறுத்தியுள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

அமெரிக்கா சென்றுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கு, அமெரிக்க
காங்கிரஸ் உறுப்பினர்களான வில்லிநிக்கேல், டெபோரா றோஸ், ஜமி ரஸ்கின், டானி கே. டேவிஸ் ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இலங்கை தமிழர்களின் நலனில் அக்கறை கொண்ட அவர்களிடம், போர் முடிவடைந்த பிற்பாடு தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகள் மிகத்தீவிரமாக அதிகரித்துள்ளது. அந்தவகையில் ராஜபக்ஷ தரப்பு தமிழர்களுக்கு எதிரான செயல்படுகளிலே தீவிரமாக இறங்கியிருந்தும்கூட, இன்று ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்காலத்திலே நடைபெறுகின்ற செயல்பாடுகள் ராஜபக்ஷ தரப்பு காலத்திலும் விட மிக மோசமாக நடைபெற்றுள்ளது.

ஜனநாயகத்தை மறுத்து தமிழர்களின் பேச்சு சுதந்திரம் – கருத்து சுதந்திரத்தை அவமதித்து தமிழர்களின் அடிப்படை உரிமைகளாக இருக்கக்கூடிய நினைவுகூரும் உரிமைகளும் நசுக்கப்படுகின்றன. இந்த நிலைமை மேலும் மோசமடைந்து வருகின்றன. இப்படிப்பட்ட நிலையிலே இலங்கையில் இருக்கக்கூடிய பூகோள போட்டித்தன்மை காரணமாக சீனாவுடன் மேற்கத்தைய நாடுகள் போட்டிபோடுகின்ற நிலைமை உருவாக்கி இருக்கின்ற காரணத்தினாலே தமிழர்களின் விவகாரங்கள் மிக மோசமாக போய்க்கொண்டிருந்தும் கூட அந்த விடயங்களிலே அக்கறை செலுத்தாமல் சீனாவை கட்டுப்படுத்துகின்ற ஓர் அணுகுமுறை கடைப்பிடிக்கின்ற கோணத்தில்தான்
மேற்கத்தைய நாடுகள் பொதுவாக செயல்பட்டு கொண்டு வருகின்றன.

அந்த வகையிலே தாங்கள் அனைவரும் தங்களுடைய இந்த அரசாங்கத்துக்கு அழுத்தங்களை வழங்கி விசேடமாக இலங்கை அரசை மாற்றியமைத்து இனப் பிரச்னைக்கு – தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையிலே தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைத்தாா்.

Exit mobile version