Tamil News
Home செய்திகள் இணைய பாதுகாப்புச் சட்டம் இரத்து செய்யப்படவேண்டும் – மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்

இணைய பாதுகாப்புச் சட்டம் இரத்து செய்யப்படவேண்டும் – மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்

சமீபத்தில் இயற்றப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டம் தொடர்பாக மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம்
கடுமையான கவலைகளை வெளிப்படுத்தியுள்ளது. குறிப்பாக இணையப் பாதுகாப்பு சட்ட வரைவு செயல்முறையைச் சுற்றியுள்ள இரகசியம் மற்றும் அதனை நிறைவேற்றுவதற்காக அவசர நோக்கம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளது.

மேலும் குறித்த சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் திருத்தங்களை அரசாங்கம் முழுமையாக பின்பற்றத்தவறியதையும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது. அரசியலமைப்பு பற்றிய கவலைகள் எழுப்பும் அதேநேரம் இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படும் என்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஆகவே அதனை உடனானடியாக் இரத்து செய்து, இணைய பாதுகாப்பின் கவலைகளை உரியவகையில் நிவர்த்தி செய்து சட்டத்தை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Exit mobile version