Tamil News
Home செய்திகள் சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் யாரும் நுளைய முடியாது – பொலிஸ் தடைவிதிப்பு

சுதந்திரக் கட்சி தலைமையகத்துக்குள் யாரும் நுளைய முடியாது – பொலிஸ் தடைவிதிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு சில ஆவண கோப்புக்கள் காணாமல் போயுள்ளதால் கொழும்பு டார்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் எவரும் நுழைவதற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முடியும் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்துக்குள் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் சில ஆவணகோப்புகள் காணாமல் போயுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் துஷ்மந்த மித்ரபால நேற்று வெள்ளிக்கிழமை மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் இதன் காரணமாக நாளை பிற்பகல் வரை சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

எவ்வாறாயினும், சம்பவத்துடன் தொடர்பில்லாத சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தின் கேட்போர் கூடத்துக்குள் நுழையவிடாமல் பொலிஸார் தடுத்துள்ளதாகவும் பதில் பொதுச் செயலாளர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Exit mobile version