Tamil News
Home செய்திகள் சுகாதார தொழில்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு – நேற்றைய பேச்சுக்கள் தோல்வி

சுகாதார தொழில்சங்கங்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு – நேற்றைய பேச்சுக்கள் தோல்வி

நாடளாவிய ரீதியில் சுகாதார தொழில்சங்கங்கள் முன்னெடுக்கும் பணிப்புறக்கணிப்பு இன்று புதன்கிழமையும்
தொடரும் என்று சுகாதார தொழில் சங்கங்கள் கூட்டிணைவின் ஒருங்கிணைப்பாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சுகாதார தொழில்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் பேச்சு நடைபெற்றது. இதில், இணக்கம் எட்டப்படாத நிலையில் இன்றைய தினமும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க சுகாதார தொழில் சங்கங்கள் தீர்மானித்தன.

நேற்று செவ்வாய்க்கிழமையும் சுகாதார தொழில்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருந்தன. இதனால், மருத்துவ சேவைகளை பெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு சென்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

எனினும், சில மருத்துவமனைகளில் இராணுவம் இந்த சேவையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. முன்னதாக, போக்குவரத்து உள்ளிட்ட பிற கொடுப்பனவாக 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகின்றது. இதேபோன்ற கொடுப்பனவு தமக்கும் வழங்கப்பட வேண்டும் என்று கோரி 72 தொழில்சங்கங்கள் ஒன்றிணைந்து பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தன.

இறுதியாக, கடந்த 01, 02ஆம் திகதிகள் முன்னெடுக்கப்பட்டன. சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரணவுடன் நடத்தப்பட்ட பேச்சைத் தொடர்ந்து பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாகக் கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version