Tamil News
Home செய்திகள் சுகாதார சேவைகள் அத்தியவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதி உத்தரவு

சுகாதார சேவைகள் அத்தியவசிய சேவைகளாக பிரகடனம் – ஜனாதிபதி உத்தரவு

சுகாதார சேவைகளுடன் தொடர்புடையபல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் இந்த விசேட வர்த்த மானிவெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, மருத்துவமனைகள், நேர்சிங் ஹோம்கள், மருந்தகங்கள் மற்றும் பிற ஒத்த நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசணை ஊட்டல் மற்றும் சிகிச்சை தொடர்பாக தேவைப்படும் அல்லது செய்ய வேண்டிய அனைத்துச் சேவை பணிகள் அத்தியாவசிய சேவைகளாக அதிவிசேட வர்த்தமானியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

Exit mobile version