Tamil News
Home உலகச் செய்திகள் சீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக் குத்து;37 மாணவர்கள் காயம்

சீனாவில் ஆரம்பப் பாடசாலையில் கத்திக் குத்து;37 மாணவர்கள் காயம்

சீனாவில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 37 மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் சீனாவின் குவின்சி சுஹாங் மாகாணத்தில் நடந்துள்ளது.

காயம் அடைந்த அனைவரும் மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய நபர் அப்பள்ளியில் காவலராகப் பணியாற்றியவர் என்றும் தற்போது அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த அனைவரும் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் ஆரம்பப் பள்ளியில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் பள்ளி மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சீனாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இளைஞர் ஒருவர் நடத்திய தாக்குதலில் மாணவர்கள் 9 பேர் பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version