Tamil News
Home செய்திகள் சிறீலங்காவின் இனவாதம் பிரித்தானியா பிரதமர் மீதும் பாய்ந்தது

சிறீலங்காவின் இனவாதம் பிரித்தானியா பிரதமர் மீதும் பாய்ந்தது

பிரித்தானியாவில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்து பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் ஆற்றிய உரைக்கு எதிராக சிறீலங்காவின் பௌத்த துறவி தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

பிரித்தானியா பிரதமரின் இந்த உரைக்கு எதிராக சிறிலங்கா அரசு பொதுநலவாய நாடுகள் அமைப்பில் இருந்தும், ஐக்கிய நாடுகள் சபையில் இருந்தும் வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார் ஓமல்பே சோபித தேரர்.

பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்கள் தனக்கு வாக்களித்ததற்கு நன்றி தெரிவித்த பிரித்தானிய பிரதமர் சிறீலங்காவில் முன்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் வேண்டும் எனவும், அங்கு நல்லணக்கம் ஏற்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

தமிழ் மக்களுக்கு பிரதமர் நன்றி தெரிவித்ததை பொறுத்துக் கொள்ளாத பௌத்த துறவி, ஜோன்சன் சிறீலங்கா விவகாரங்களில் தலையிடாது, பிரக்சிற் நடவடிக்கைகளை பார்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஜோன்சன் பிரித்தானியாவுக்கா அல்லது சிறீலங்காவுக்கா பிரதமர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே, சிறீலங்காவில் உள்ள பௌத்த துறவிகள் மிகவும் இனவாதம் மிக்கவர்கள், அவர்கள் அதிகளவில் அரசியல் தலையீடுகளை கொண்டிருப்பதுடன், இனக்கலவரங்களையும் முன்னின்று நடத்திவந்ததும் வரலாறு என அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

துறவிகளின் இந்த செயல் பௌத்த மதத்தை அவமதிக்கும் செயலாகும் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

Exit mobile version