Home ஆய்வுகள் சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி இரண்டு

சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை – பகுதி இரண்டு

“புதிய வகையான தொழில் நுட்பத்தை பெறுவதாயின் சிரமமாக இருந்தாலும் நான் யூடியூப் மூலமாக பல டிசைன்களை பார்த்து அதே மாதிரியாக பைகளை தைத்து வருகிறேன் மேலும் பல பாடசாலை பைகள் ஓடர்களும் கிடைக்கப் பெற்றுள்ளன ”  பிஸ்ரியா தனது உற்பத்தி பொருட்களை அதிகமாக சந்தைப்படுத்தக்கூடிய வாய்ப்புக்களை பெற்றுள்ளார் பல கடைகளுக்கும் அனுப்புவதுடன் வெளி இடங்களுக்கும் ஏற்றுமதி மூலமாக ஏற்றுமதி செய்தும் வருகிறார் பெண்களுக்கு தேவையான கைப் பை, பாடசாலை பை என பல வடிவங்களில் தனது திறமை மூலமாக பல ரூபாக்களை இலாபமாக ஈட்டி வருகிறாள் .

Trinco women 4 சிறந்த பெண் தொழில் முயற்சியாண்மையாளருக்கான விருதினை பெற்ற பெண்மணியின் வெற்றிக் கதை - பகுதி இரண்டுஅரச துறையில் தம்பலகாமம் பிரதேச செயலகம் ஊடாக தேவையான வழிகாட்டல்களை பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.பாமினி மற்றும் விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் வழங்கி வருகின்றனர் . உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலமாக துணி கழிவுகளை கொண்டும் சிறிய  வளங்களை பயன்படுத்துவது தொடர்பிலும் திறம்பட தனது சுயதொழிலை முன்னெடுத்து வருகிறார். கழிவுகளை வைத்து வர்ணமயமான பூ சாடிகள் என பல தயாரிப்புக்களை செய்து சூழல் மாசுபடாத வகையில் உற்பத்தி துறையை முன்கொண்டு செல்லும் அளவுக்கு அரச துறை பங்களிப்பு இந்த பெண்மணிக்கு ஒரு பக்கபலமாக அமைகிறது குறித்த பிரதேசத்தில் முதலிடத்தில் உற்பத்தி சுயதொழில் முன்னேற்றம் ஊடாக வளர்ச்சி கண்ட பெண்ணாக இந்த பெண்மணி மாத்திரமே உள்ளார் .

தன்னகத்தை பல திறமைகளை கொண்ட பிஸ்ரியா தினமும் மதக் கடமைகளை முடித்து விட்டு இறைவனின் நம்பிக்கையோடு தனது மேலதிகமான தொழிலான வளவாளர் பயிற்சியை நிறைவேற்ற செல்வதுமுண்டு இதனால் சில வேலைகளில் தனக்கு சோர்வான மன நிலை ஏற்படுவதாகவும் அதிக வெப்ப நிலையினால் கலைப்பு தலைவலி போன்றன ஏற்பட்டாலும் அதையும் பாராது தொழிலில் முன்னேற வேண்டும் என நினைப்பவள்.

“இந்த துறையில் நான் மேலும் முன்னேறி எனது கனவுகளை நிறைவேற்றுவேன் பெண் என்றால் தனித்துவமான என்றல்ல ”

பல கனவுகளோடு வாழும் இந்த பெண் தனது சுயதொழில் மூலமான முயற்சிகள் தொடர்ந்தும் நிறைவேற வேண்டும் என்பது தனது பிள்ளைகளின் ஆசைகளாக இருப்பது என்பதும் எதிர்பார்க்கப்படுகிறது. “கொரோனா மற்றும் பொருளாதார நெருக்கடியால் நான் மனமுடையவில்லை சந்தைப்படுத்தல் குறைவாக இருந்தது நாடு முடக்கப்பட்டது இதனால் பாரிய விற்பனை வீழ்ச்சி கண்டிருந்தது இது ஒரு பக்கம் இருக்க மீண்டும் எனது உற்பத்திகளை சேமித்து வைத்திருந்தேன் மொத்தமாக எல்லா நெருக்கடிகளில் இருந்தும் மீளவும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி ஒரு ஜூகி இயந்திரம் அந்த இலாபத்தில் இருந்தே வாங்கினேன் ” எனவும் பிஸ்ரியாவின் நெருக்கடி நிலமைகளின் போதான தனது அனுபவங்களை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

தனது இளவயதில் பாடசாலை செல்லும் காலத்திலும் தனது எதிர்காலம் பற்றிய சிந்தனை பலதும் தனக்குள் இருந்தது இருந்த போதிலும் பெண்கள் மென்மையானவர்கள் அரச தொழில் மாத்திரம் தான் கிடைக்க வேண்டும் என வாழ்ந்தாலும் அரச தொழில் இல்லாவிட்டாலும்  சொந்த முயற்சியில் சொந்த காலில் நின்று வாழ்க்கை எனும் பாதையை தனக்காக அமைத்துக் கொண்டாள் இவரது கணவரின் பக்க பலத்துடன் ஆரம்பித்த குறித்த தொழில் முயற்சி தற்போது பாரிய வளர்ச்சி கண்ட நிலையில் முதலாளியாக மாறியிரூக்கிறார் இந்த பெண்மணி.

நாட்டின் அபிவிருத்தியில் பெண்களின் பங்களிப்பும் ஒன்றாக காணப்படுகிறது என்பதற்கு இவரும் ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார்.

“தற்போது எனக்கு நேரம் கிடையாது தினமும் வெளியில் சென்று பல பயிற்சிகளை கூட வளவாளராக சென்று நடாத்துகிறேன் வீட்டுக்கு வந்தால் வீட்டு வேலை ஆனால் தனிமரமாக நின்று உழைத்து சாதித்து காட்ட வேண்டும் ” என ஒரு புன்னகையுடன் தனது வார்த்தை வெளிப்படுத்தினார்.

நல்லதொரு சுறு சுறுப்பான புன்னகையுடன் பேசக் கூடிய இவர் போன்ற பெண்மணி நம் நாட்டுக்கும் கிடைத்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக காணப்படுகிறது.

“செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள்” அது போன்று கடமை கட்டுப்பாடு என மழை காற்று வெயில் என பாராது தினமும் தனக்கான ஒரு தனியிடத்தை பிடித்து தொழிலதிபராக மாறியுள்ள இப் பெண்மணி மூலம் நாமும் நிறையவே கற்க வேண்டியுள்ளது.

இளவயதில் இது போன்ற தொழில் முயற்சியாண்மையாளராக சிறப்பாக இங்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளார்.  பல ஆயிரக்கணக்கான பை உற்பத்திகளை மேற்கொண்டு தொழிலை திறம்பட செய்து வருகிறார்.

குடும்பம் பிள்ளைகள் என இருந்த போதிலும் பல மணி நேரங்களை தனது தொழில்வாண்மையான கடமைகளுக்காக செலவிட்டு வருகிறார். தொழிலையும் கல்வியையும் இரண்டரக் கலந்து தனது முயற்சியினால் முன்னேற்றமடைந்து சாதனைப் பெண்ணாக மாறியுள்ளார் இதற்கு கடந்த காலம் வரலாறு சாட்சி சொல்லும்.

” என்னால் வீட்டில் சும்மா இருக்க முடியாது ஆறு மாதம் சும்மா இருந்தேன் கணவருக்கு தொழில் செய்ய விருப்பமில்லை அதையும் தாண்டி கணவரின் உதவியுடன் ஒரு மாதத்தில் தொழிலை கற்று தற்போது வளர்ச்சி கண்டுள்ளேன் ” என தொழில் ஆர்வம் பற்றியும் முன்னைய நினைவுகளை மீட்டிக் கொண்டார்.

அரசாங்க உதவியை மாத்திரம் நம்பி விடாது முயற்சி மூலம் பல ரூபாக்களை இலாபமாக இது போன்ற தொழில் மூலமாக நன்மையடைந்து வந்து தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக கவனிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

வங்கியில் கடனுக்காக விண்ணப்பம் செய்த போதும் அது நிராகரிக்கப்பட்டாலும் தொழிலை மேலும் வளர்ச்சிப் பாதைக்கு இட்டு செல்ல பல வழிகள் தனக்கு இருக்கு என்பதை உணர்ந்து கொண்டாள். மகளிர் சங்கத்தின் ஒரு தலைவியாக செயற்பட்டு சங்கத்தின் வளர்ச்சிக்காகவும் பாடுபடுவதுடன் பல வகையான வேலைத் திட்டங்களையும் சங்கம் மூலம் நடை முறைப்படுத்தி ஆளுமையினை விருத்தி செய்துள்ளார். ஒரு சிறந்ததொரு தலைமைத்துவம் தனது வியாபாரம் தொழில் சந்தைப்படுத்தல் மூலமாக அதனை நிரூபித்து காட்டியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டாலும் பொருட் கொள்வனவில் தட்டுப்பாடு ஏற்பட்ட வேலையிலும் தோல்வியை கண்டு துவண்டு போகாது சவால்களுக்கும் முகங்கொடுத்து வெற்றி கண்டுள்ளார். திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு சென்று தனது தொழில் விருத்திக்காக பாடுபட்டு வரும் இது போன்ற பெண்களை நாமும் கௌரவிக்க வேண்டும்.

வாழ்க்கையில்  ஒரு சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் அவரது தொழில் முயற்சியில் ஓடிக்கொண்டே இருந்தன.

இதன் மூலம் உழைக்கும் பணம் குடும்பம் கல்வி செலவு என பலதரப்பட்ட விடயங்களுக்காகவும் அன்றாட ஜீவனாம்சத்துக்காகவும் பாரிய பங்களிப்பு செய்வதை உணர முடிகிறது.

அடிக்கடி அவ்வப்போது சுற்றுலா பயணங்கள் சமூக நல்லிணக்க பயணங்கள் என ஏனைய சமூக அமைப்புக்கள் மூலமாகவும் இவர் செயற்பட்டு வருவதையும் அறிய முடிகிறது.

தமிழ் மொழி தனது தாய் மொழியாக இருந்தாலும் சரளமாக சிங்கள மொழி பேச முடியும் என்பதனால் மொழி ஒரு பிரச்சினை அல்ல தனது தொழிலுக்கு மேலும் ஒரு அடி உயரத்தில் வைக்கிறது.

சமூகத்தில் நிம்மதியாக தலை நிமிர்ந்து வாழ்வதற்கான சமூக ஒத்திசைவுடன் அக்கம் பக்கத்தாருடன் சகோதரத்துவ பண்புகளை கொண்டு வாழும் நல்லதொரு மனப்பாங்கினை கொண்டவராக திகழ்கிறார் இப்பெண்மணி.

ஒட்டுமொத்தமாக வாழ்வின் பல இரகசியங்களை கொண்டிருந்தால் பணம் என்கின்ற தேவை இங்கு உணரப்படுகிறது.

இப்படியான தொழில்களால் அவளின் முன்னேற்றம் கண்டு சிலர் வியந்து போயுள்ளனர்.

வரலாற்றில் பல தடைகளை தாண்டி சாதனை தொழிலாக இந்த தொழில் மூலம் அவர் நல்லதொரு பொருளாதாரத்தை கட்டியெழுப்பியுள்ளார்.

பல்வேறு சமூக மட்ட அமைப்புக்களுடன் திருகோணமலை மாவட்டத்தில் மட்டுமல்ல கிழக்கில் உள்ள அமைப்புக்களுடன் தொடர்பு பட்டதாக அவரது கடந்த கால நினைவுகளை வெளிப்படுத்தியிருந்தார்.

தனது கடையில் பல இளம் பெண் யுவதிகள் முன்னர் பயிற்சி பெற்றுச் சென்று சில இடங்களில் பணி புரிவதாகவும் அவர்களுக்கான பயிற்சியினை தானே கொடுத்ததாகவும் இங்கு சுட்டிக்காட்டினார்.

இது போன்ற பல பெண்களை உருவாக்க வேண்டும் நாட்டின் அந்நியச் செலவாணி இவர்கள் மூலமாக கிடைக்க வேண்டும் என்பதும் ஒரு எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக கொழும்புக்கு செல்வது வழக்கம் ஆனாலும் தூர பஸ் பயணம் தனக்கு சரிவராது ஒரு வகையான வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவள் தொழிலை விட்டு விடாது மேலும் பல வளர்ச்சிகளை நம்மில் இருந்து உருவாக்கி எதிர்கால சந்ததியினர் அனுபவிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

“பெண்களாக இருந்தாலும் தொழிலின்றி வீடுகளில் முடங்கி விடக்கூடாது பல வழிகளில் தொழிலை செய்து கொள்ள முடியும் தற்போது ஒருவர் மாத்திரம் உழைப்பது போதாது பெண்களே இளம் யுவதிகளே நீங்களும் தொழிலை கற்று இது போன்று ஏதாவது ஒன்றை வாழ்க்கையில் வருமானமீட்டும் பெண்ணாக இருங்கள் சுமையாக இருந்து விடக் கூடாது” என்ற விடயங்களை நாட்டில் உள்ள பெண்களுக்கு அவர் அடிக்கோடிட்டு காட்டியுள்ளார்.

ஹஸ்பர் ஏ ஹலீம்

Exit mobile version