Tamil News
Home உலகச் செய்திகள் சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள்

சிரியாவிற்குள் நுழைந்த துருக்கிப் படைகள்

குர்து படைகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட, துருக்கிப் படைகள் சிரியாவிற்குள் நுழைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஊடகங்கள் தரப்பில், “குர்து கிளர்ச்சிப் படைகள் மீது இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவதற்காக துருக்கிப் படைகள் சிரியாவிற்குள் நுழைந்துள்ளன. இதனை துருக்கி இராணுவ அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் துருக்கியின் எல்லைப் புறத்தில் ஈரான் படைகள் இராணுவப் பயிற்சி மேற்கொண்டுள்ளன. இதன் காரணமாக ஈரான்-சிரியா- துருக்கி எல்லைகளில் பதற்றம் நிலவுகின்றது.

சிரியாவில் அதிபர் ஆசாத்திற்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்து வரும் சண்டை இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்திற்கு, ரஷ்யா ஆதரவளித்து வருகின்றது. ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா போரிட்டு வருகின்றது.

கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருகின்றது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.

சிரியாவில் குர்து கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக துருக்கி இராணுவ நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version