ரமழான் மாதத்தில் இரண்­டா­யிரம் முஸ்­லிம்கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜிஹாத் புத்­தகம் வைத்­தி­ருந்த குற்­றத்தில் எமது முஸ்லிம் மக்கள் கைது­செய்­யப்­ப­டு­கின்­றனர். சுக்கான் சின்னம் பொறித்த உடை அணிந்த குற்­றத்தில் பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். முகத்தை மூடி எச்சில் உமிழ முயன்ற பெண் ஒருவர் கைது­செய்­யப்­பட்டார். இவ்­வாறு நீங்கள் நடந்­து­கொண்டால் எங்கே அடிப்­ப­டை­வாதம் நிறுத்­தப்­ப­டப்­போ­கின்­றது? முதலில் அர­சாங்கம் உரிய சட்­டங்­களை சக­ல­ருக்கும் ஒரே மாதிரி பிர­யோ­கிக்க வேண்டும். தேசிய பாது­காப்பை உறு­திப்­ப­டுத்தும் சகல சட்­டத்­தையும் ஆத­ரிக்க நாம் தயா­ராக உள்ளோம். இதனை நாம் வெளிப்படையாக தெரிவித்தும் விட்டோம். கடுமையான சட்டங்களை கொண்டு நாட்டினை பலப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தை சார்ந்தது.

நிலைமைகளை கட்டுப்பாட்டில் கொண்டுவந்து விரைவில் எமது மக்கள் சுதந்தரமாக வாழ இடமளிக்க வேண்டும்,நான் ஒன்றை மட்டும் கேட்கின்றேன், இன்னும் எவ்வளவு காலத்துக்கு அவசரகால சட்டத்தில் கையாளப்போகின்றீர்கள். எமது மக்களின் பாதுகாப்பு எமக்கு முக்கியம். ஐ. எஸ் என்பது இஸ்லாம் அல்ல. அவர்கள் எவரும் முஸ்லிம்களும் அல்ல. இதனை நீங்கள் தான் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.