Tamil News
Home செய்திகள் வடபகுதியில் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு: ஐ.நா

வடபகுதியில் சிறுவர் மீதான பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரிப்பு: ஐ.நா

சிறீலங்காவின் வடபகுதியில் சுற்றுலாப் பயணிகளின் பாலியல் தேவைகளுக்கு சிறுவர்களை பயன்படுத்துவது முன்னர் எப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி ரெனேற் வின்ரெர் கடந்த வியாழக்கிழமை (06) தெரிவித்துள்ளார்.

தமது பிள்ளைகளை விற்பனை செய்யும் பலவந்தமான நிலைக்கு பல பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த துஸ்பிரயோகங்கள் பல பகுதிகளில் இடம்பெற்றுவரும்போதும் வடபகுதியில் அதிகமாக உள்ளது.

இதனிடையே, ஐக்கிய நாடுகள் சபையின் பல உரிமை அமைப்புக்கள் நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளன. பல அதிகாரிகள் ஊதியங்கள் இன்றியே பணியாற்றி வருகின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version