Tamil News
Home செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் பரப்புரை; தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன

சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் பரப்புரை; தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகின்றன

பொதுத் தேர்தலுக்கான பரப்புரைகள் முடிவடைந்து, நேற்று அதிகாலை முதல் அமைதிக்காலம் ஆரம்பமாகியுள்ள போதிலும் சமூக ஊடகங்களில் தொடர்ந்தும் தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.

அமைதிக்காலத்தில் சமூக ஊடக தேர்தல்பிரச்சாரம் பல மடங்காக அதிகரித்துள்ளது என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது. சுதந்திரமான நீதியான தேர்தல் இடம்பெறுவதை உறுதி செய்வது அனைத்து பொதுமக்களினதும் கடமை என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.

சமூகஊடகங்களை கண்காணிப்பதற்கான முழுமையான திட்டம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம், கடந்த கால தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட கட்டுரைகள் ஆவணங்கள் போன்றவற்றை வேட்பாளர்களின் பிரச்சாரத்துக்காக அமைதிக்காலத்தில் பயன்படுத்துவதை அவதானிக்க முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

1006 தேர்தல் வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளனவும், ஞாயிறு நள்ளிரவுக்கு பின்னர் பல சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன இவை சிறிய சம்பவங்கள் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தனது அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

Exit mobile version