Tamil News
Home செய்திகள் சந்திரிகாவின் புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை நியமிப்பு

சந்திரிகாவின் புதிய கூட்டணிக்கு தலைமைத்துவ சபை நியமிப்பு

முன்னாள் அரச தலைவர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் பொதுஜன ஐக்கிய பெரமுனவின் புதிய கூட்டணிக்கு 20 அரசியல் கட்சித் தலைவர்களைக் கொண்ட தலைமைத்துவ சபையொன்று நியமிக்கப்படவுள்ளது.

கூட்டமைப்பினரின் தலைமைத்துவம் முன்னாள் ஜனாதிபதியிடம் இருந்த போதிலும், மற்றொரு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான கட்சித் தலைவர்களைக் கொண்ட தலைமைத்துவ சபையே கட்சியின் ஆட்சியை முன்னெடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குமார வெல்கம, நசீர் அஹமட், லசந்த அழகியவன்ன, அநுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, நிமல் லான்சா மற்றும் சிரேஷ்ட சபை உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்ட ஏனையவர்களில் அடங்குகின்றனர்.

இவர்களுடன் மேலதிகமாக, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ராஜித சேனாரட்ன, சரத் பொன்சேகா மற்றும் வேறு சில சிறு கட்சிகளையும் தொடர்பு கொள்ள முயற்சிப்பதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version