Tamil News
Home செய்திகள் கோவிட்- 19 தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: சிறீலங்கா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிப்பு

கோவிட்- 19 தொற்றினால் மரணிப்போரை அடக்கம் செய்ய அனுமதி: சிறீலங்கா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின்  உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியமைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவித்துள்ளது

நாட்டில் கொரோனா தொற்று ஆரம்பித்த நாள் முதல், அதன் காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட்டு வந்தது. இதில் கொரோனா தாக்கத்தால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்யாது, அடக்கம் செய்ய வேண்டும் என முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் அரசாங்கம் அவர்களின் கோரிக்கையினை கண்டுகொள்ளாது இருந்து வந்தது.  இது சர்வதேச கவனத்தையும் பெற்றிருந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் பிரதமர் மகிந்த ராஜபக்சே, நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் உடல்கள் அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதைத் தொடர்ந்து தற்போது அடக்கம் செய்வதற்கு அனுமதித்து அரசாங்கத்தால் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளார். அதே நேரம் வெளியுறவு அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழப்பவர்களின் உடல்களை  அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியதன் ஊடாக பரஸ்பர புரிந்துணர்வு மேலும் வலுவடைவதற்கு இந்த விடயம் ஏற்புடையதாக அமைந்துள்ளது.

அந்தவகையில் இவ்விடயத்துத்துக்கு இலங்கையின் தலைமைக்கு பாகிஸ்தான் நன்றி தெரிவிக்கிறது’ என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version