Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா பாதிப்புகள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா பாதிப்புகள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொரோனாவினல் ஏற்பட்ட பாதிப்புகள் 10 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்று உலக சுகாதார அமை்பபு கவலை தெரிவித்துள்ளது. உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் 1.84 கோடி பேர் பாதிக்கப்பட்டும், 6 இலட்சத்து 96ஆயிரம் பேர் மரணமடைந்தும் உள்ளனர். 1.16கோடி பேர் உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேவேளை உலக சுகாதார அமைப்பின் தலைமையகத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதற்கு அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றும் போது, கொரோனா குறித்த அறிவியல் பூர்வமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இதுவரை இல்லாத வேகத்தில் தடுப்பு மருந்தை கண்டு பிடித்தாலும், அந்த மருந்து அனைவருக்கும் சென்றடைய வெகு காலம் எடுக்கும்.

மேலும் இந்த தொற்று நோய் நூற்றாண்டில் ஒருமுறை வரும் சுகாதார நெருக்கடி. இதன் விளைவு 10 ஆண்டுகளுக்கு மேலாக உணரப்படும் என்றும் அதுவரை கொரோனாவோடு வாழ்ந்து கொண்டே அதனுடன் போராட வேண்டும் என்றும் டெட்ரோஸ் தெரிவித்தார்.

Exit mobile version