Tamil News
Home உலகச் செய்திகள் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை – யுனிசெஃப்

கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை – யுனிசெஃப்

கொரோனா வைரஸ் காரணமாக குழந்தைகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்த யுனிசெஃப், ஆசிரியர்களுக்கு  கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனா வைரஸுக்கு 6.5 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 14 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள்  உயிரிழந்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்க, உலகம் முழுக்க 150-க்கும் மேற்பட்ட மருந்துகள் குறித்து ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. மேலும்  இந்த ஆராச்சி முடிவுகளின் படி தற்போது அனுமதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து குழந்தைகளுக்கான சர்வதேச தன்னார்வ அமைப்பான யுனிசெஃப் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று நோய் காரணமாக உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆசிரியர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பு மருந்தைச் செலுத்துவதன் மூலம் கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்பைச் சரி செய்யலாம்.

சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  கொரோனா  தடுப்பு மருந்து வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version