Tamil News
Home உலகச் செய்திகள்  கொரோனாவுக்கு பின்னர் மனித கடத்தல்: தென்கிழக்காசிய நாடுகளுக்கு சவால்

 கொரோனாவுக்கு பின்னர் மனித கடத்தல்: தென்கிழக்காசிய நாடுகளுக்கு சவால்

ஆசியான் நாடுகளாக அறியப்படும் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய நாடுகளின் பாதுகாப்புப் படையினர் கொரோனாவுக்குப் பின்னரான காலத்தில் உருவெடுக்கப் போகும் மனித கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க தயார் நிலையில் இருக்க வேண்டும் என ஆசியான் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தொழிலாளர்களை சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அண்டை நாடுகளுக்கு அழைத்துச் செல்லுதல், அகதிகளின் தஞ்சக்கோரிக்கைப் பயணங்கள் உள்ளிட்டவற்றை மனித கடத்தலின் அங்கமாகவும் நாடுகடந்த குற்றமாகவும் இந்நாடுகள் கருதுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version