Home ஆய்வுகள் கேள்விக்குறியாகும் இந்தியாவின் ஜனநாயக அறைகூவல்கள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

கேள்விக்குறியாகும் இந்தியாவின் ஜனநாயக அறைகூவல்கள் – வேல்ஸ் இல் இருந்து அருஸ்

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் காசா பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான குண்டு வீச்சுக்களால் இதுவரையில் 28,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஏறத்தாள 70,000 பேர் காயமடைந்துள்ளனர்.

உலக உள்ள மக்கள் அனைவரும் சமூகவலைத்தளங்களில் நேரிடையாக பார்த்துக்கொண்டிருக்க இந்த மனிதப் படுகொலைகள் எந்தவிதமான தடைகளும் இன்றி உலகில் ஜனநாயக நாடுகள் என தம்மை கூறிக்கொள்ளும் மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளுடன் நிகழ்ந்து வருகின்றன.

இந்த இனப்படுகொலையை நிறுத்துவதற்கு தென்னாபிரிக்கா நீதிகோரும் வழக்கு ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையின் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தாலும் அதுவும் இந்த இனப்படுகொலையை நிறுத்த உதவவில்லை. இந்த நிலையில் பல நாடுகள் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவுகளை முறித்துக்கொண்டுள்ள அதேசமயம் சில நாடுகள் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகங்களையும் தடை செய்துள்ளன.

ஆனால் இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இஸ்ரேலுக்கு இந்தியாவின் அதானி குழுமத்தின் ஆயுத உற்பத்தி நிறுவனமான Adani-Elbit Advanced Systems India Ltd. என்ற நிறுவனம் வழங்கிய 20 Hermes 900 Kochav or Star என்ற ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் புதிய சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளன. எனினும் விமானங்கள் களமுனைக்கு அனுப்பப்பட்டது தொடர்பில் இரு நாடுகளும் கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

Hermes 900 Kochav கேள்விக்குறியாகும் இந்தியாவின் ஜனநாயக அறைகூவல்கள் - வேல்ஸ் இல் இருந்து அருஸ்இஸ்ரேலின் Elbit நிறுவனமும், அதானியின் Adani Defence and Aerospace நிறுவனமும் இணைந்து 2018 ஆம் ஆண்டு முதல் ஆயுத உற்பத்திகளை இந்தியாவில் மேற்கொண்டு வருகின்றன.

காசாவில் அதிக மக்கள் தஞ்சமடைந்துள்ள ரபா பகுதி மீது தாக்குதல்களை நடத்தப்போவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ள நிலையில் இந்தியா இந்த தாக்குதல் விமானங்களை வழங்கியுள்ளது. ரபா பகுதி மீதான தாக்குதல் மிகப்பெரும் மனிதப்பேரவலத்திற்கு வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்திருந்தது.

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளில் இந்த விமானங்கள் மிகப்பெரும் பங்கை வகிக்கின்றன. அது உளவு நடவடிக்கைகளுக்கும், குண்டுவீச்சு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்படுவதுண்டு.

2014 ஆம் ஆண்டு பாலஸ்தீனம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் இந்த விமானத்தை முதலில் பயன்படுத்தியிருந்தது. அந்தப் போரில் 2,000 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதுடன், 10,000 மக்கள் காயமடைந்திருந்தனர் என படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்தள்ளனர். அங்கு கொல்லப்பட்டவர்களில் 37 விகிதமானவர்கள் ஆளில்லாத தாக்குதல் விமானங்களினால் கொல்லப்பட்டதாக மனித உரிமை அமைப்புக்கள் தெரிவித்திருந்தன.

தற்போதைய போரில் இந்தியாவின் தற்போதைய அரசு இந்தியாவின் முன்னைய கொள்ககைளை மாற்றி இஸ்ரேலுக்கு தனது ஆதரவுகளை வழங்கிவருவதை இந்த நடவடிக்கை மேலும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது பாலஸ்தீனம் தொடர்பில் இஸ்ரேலின் கொள்கைகளை இந்தியா ஆதரிப்பதையும் காட்டுவதாக மனித உரிமை மற்றும் படைத்துறை அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் தென்னிந்திய மாநிலமான ஜதராபாத்தை தளமாகக் கொண்ட அதானியின் நிறுவனம் வழங்கிய விமானங்கள் தற்போது நடைபெறும் போரில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நடுத்தர தூரவீச்சுக்கொண்ட, தொடர்சியாக 30 மணிநேரம் பறக்கும் இந்த விமானங்கள் உளவுத் தகவல்களை சேரிப்பதுடன், தாக்குதல்களையும் மேற்கொள்ளவல்லவை. 30,000 அடிகள் உயரத்தில் பறக்கும் இந்த விமானம் 450 கிலோ வெடிகுண்டுகளை காவிச்செல்லவல்லது.

மேற்குக்கரை மற்றும் காசா பகுதிகள் மீதான பல தாக்குதல்களில் இந்த விமானங்களளே பயன்படுத்தப்பட்டிருந்தன. கொலைகார விமானங்கள் (Killer Drones) என அழைக்கப்படும் இஸ்ரேல் வசம் உள்ள 4 விமானங்களில் இதுவும் ஒன்று

எனவே இஸ்ரேலின் தற்போதைய அவசர ஆயுத தேவையை இந்திய நிறுவனம் பூர்த்தி செய்துள்ளது. இஸ்ரேலின் இனஅழிப்புக்கு துணைபோகும் மேற்குலக கூட்டணியில் இணைவதைவிடுத்து தென்னாபிரிக்கா தலைமையிலான தெற்குலக மண்டலத்தில் இந்தியா ஒரு முன்னுதாரணமாக விளங்கவேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம் என பாலஸ்தீனத்தின் பி.டி.எஸ் தேசிய சபையைச் சேர்ந்த சியார் ஹீவர் தெரிவித்துள்ளார்.Bottom of Form

இந்தியாவின் ஆயுதங்கள் பாலஸ்தீன மக்களை படுகொலை செய்வதற்கு பயன்படுத்தப்படுவது அதிர்ச்சிகரமானவை ஆனால் ஆச்சரியமானது அல்ல ஏனெனில் கடந்த 10 வருடங்களாக இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவுகள் வலுப்பட்டு வந்துள்ளது என பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் அந்தோனி லொவன்ஸ்ரின் தெரிவித்துள்ளார்.

இந்த இரு நாடுகளின் உறவுகள் அனைத்துலக மட்டத்தில் அதிக கவனத்தைபெறவில்லை என்றாலும் உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என கூறும் இந்தியா இனப்படுகொலைக்கு உதவுவது தொடர்பில் நாம் மேலதிக கவனத்தை செலுத்தவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் காலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் அதிகரித்தே வருகின்றது. காஸ்மீரில் காணி அதிகாரத்தை நீக்கியது, அயோத்தியில் இராமர் ஆலையம் அமைத்தது என அதன் பட்டியல் நீளம். மேடியின் ஆட்சிக் காலத்தில் தான் இஸ்ரேலுடனான உறவுகளும் அதிகம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் அது ஒரு பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஆயுதங்களை இஸ்ரேலிடம் இருந்து வாங்குகின்றது. கடந்த 2015 – 2019 காலப்பகுதியில் இஸ்ரேலிடம் இருந்தான ஆயுத கொள்வனவு 175 விகிதம் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளும் இணைந்து ஆயுத உற்பத்தியிலும் ஈடுபடுகின்றன. எக்ஸ்-95 தாக்குதல் துப்பாக்கி, Galil குறிபார்த்துச்சுடும் துப்பாக்கி Negev இலகு இயந்திர துப்பாக்கி மற்றும் Hermes 900 ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் என்பன அவற்றில் சில.

இஸ்ரேலின் ஆயுததேவைகளை விரைவாக உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா விளங்குவதுடன், இஸ்ரேலின் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தனது படையினரை நவீனமயப்படுத்தும் திட்டத்தையும் இந்தியா மேற்கொண்டுவருகின்றது.

ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன போர் இந்தியாவின் இந்த திட்டத்திற்கு பல சிக்கல்களை தோற்றுவித்துள்ளது. தென்னாபிரிக்கா தொடுத்த வழக்கில் ஐ.நா நிதிமன்றம் கூறிய தீர்ப்பை தொடர்ந்து பல நாடுகள்  இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்தி வருகின்றன.

இஸ்ரேலின் மிகப்பெரும் ஆயுத உற்பத்தி நிறுவனமான Elbit Systems என்ற நிறுவனத்துடடனான தமது உடன்பாடுகளை இரண்டு யப்பானிய நிறுவனங்கள் முறித்துக்கொண்டுள்ளன. எப்-35 தாக்குதல் விமானங்களுக்கான உதிரிப்பாகங்களை இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்வவதை நெதர்லாந்து நீதிமன்றம் தடை செய்துள்ளது.

ஆனால் இந்தியா தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவது இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு துணைபோவதையே காட்டுவதாக லிங்கானா என்ற பாதுகாப்பு ஆய்வாளர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் தொடர்பான தனது வெளிவிவகாரக் கொள்கையில் மாற்றமில்லை என தெரிவித்தாலும் அவர்கள் இஸ்ரேல் பக்கம் சாய்ந்துள்ளது தெளிவாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலை கண்டித்த முதலாவது தெற்கு மண்டல நாடு இந்தியா என்பதுடன் ஐ.நாவில் கொண்டுவரப்பட்ட போர்நிறுத்த தீர்மானத்தையும் முதலில் இந்தியா புறக்கணித்திருந்தது.

மிகப்பெரும் செல்வந்தரான அதானி குழுமத்தின் பொருளாதார வலைக்குள் வீழந்துள்ள இந்தியா தனது நாட்டின் இறைமையை மெல்ல மெல்ல இழந்து வருவதையே இது காட்டுகின்றது.

2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இஸ்ரேலின் ஹைய்பா துறைமுகத்தை கொள்வனவு செய்த இந்த நிறுவனம், இஸ்ரேலின் ஆயுத உற்பத்தி நிறுவனத்துடனும் கூட்டுச் சேர்ந்துள்ளதுடன், அமெரிக்காவுடன் இணைந்து கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் கையாளும் பகுதியையும் கையகப்படுத்தியள்ளது.

அதாவது உலகில் சக்திவாய்ந்த நாடாக தன்னை நிலைநிறுத்தும் தனது சொந்த நலன்களுக்கும் வர்த்தக நலன்களுக்கும் இடையிலான சமரில் இந்தியா சிக்கியுள்ளது. இந்தியாவின் இந்த நிலை என்பது மிகப்பெரும் ஆபத்தான எதிர்காலத்தை தான் இந்தியாவுக்கு உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. அதாவது தனியார் பிடியில் இருந்து இந்தியா வெளிவரமுடியாத நிலை ஒன்றை அது உருவாக்கும்.

Exit mobile version