Home ஆய்வுகள் குடி நீருக்காய் ஏங்கும் சீதனவெளி மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

குடி நீருக்காய் ஏங்கும் சீதனவெளி மக்கள் – ஹஸ்பர் ஏ ஹலீம்

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமமே சீதனவெளி கிராமம் இக் கிராமத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்தாலும் முக்கியமான மனித தேவைகளுள் ஒன்றாக குடி நீரும் காணப்படுகிறது இது முக்கியமாக இருந்தாலும் குடி நீரின்றி வாழ்ந்து வருவது பெரும் கவலைக்குரிய விடயமாக உள்ளது. இப் பகுதி மக்கள் 2012ம் ஆண்டில் யுத்த இடப் பெயர்வு காரணமாக மீள் குடியேற்றப்பட்ட நிலையில் தற்போது வரை குடிப்பதற்கு சுத்தமான குடி நீரின்றி தவிக்கின்றனர்.

Trinco water குடி நீருக்காய் ஏங்கும் சீதனவெளி மக்கள் - ஹஸ்பர் ஏ ஹலீம்இக் கிராமத்தில் சுமார் 120 குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள். மனித தேவைகளுள் குடி நீரின்றி வாழ முடியாத நிலை உள்ளது. இம் மக்கள் குடி நீருக்காக அயல் கிராமமான சந்தோச புரத்துக்கு சென்று பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தான் நீரை பெறுகின்றனர் சுத்தமான குடி நீர் தேவை தொடர்பில் பல காலமாக உரிய தரப்புக்களுக்கு தெரிவித்தும் அசமந்த போக்கில் அவர்கள் செயற்பட்டதனால் இன்னும் நீர் கிடைக்காமை வேதனையளிப்பதாக அப் பகுதி மக்கள் குள்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பில் அப் பகுதி மக்கள் சுத்தமான குடி நீர் தேவையை வேண்டி கவனயீர்பொன்றை மேற்கொண்டனர்.

தமது கிராமத்திற்கான சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித்தருமாறு வழியுறுத்தி மூதூர் – சீதனவெளி கிராம மக்கள் திங்கட்கிழமை (11.03.2024)  அன்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மூதூர் புளியடி சந்தியிலிருந்து பிரதான வீதியூடாக நடைபவணியாக மூதூர் பிரதேச சபைக்குள் நுழைந்து அங்கு கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன்,  மூதூர் பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தரிடம் மகஜரும் கையளித்துள்ளனர் .

அதன் பின் மூதூர் பிரதேச சபையிலிருந்து பிரதேச செயலகம் வரை நடைபவணியாகச் பிரதேச செயலக வளாகத்தினுள் நுழைந்து அங்கு தமது கோரிக்கைகளை முன்வைத் கோசங்களை எழுப்பியிருந்தனர்.அதன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர் மூதூர் பிரதேச செயலாளரை சந்தித்து பேசியதோடு மகஜரும் கையளித்துள்ளனர்.

இது விடயத்தில் உரிய தரப்பினரிடம் பேசி நடவடிக்கை மேற்கொள்வதாக மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் வாக்குறுதி அளித்ததையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

இப்படியாக போராட்டத்தை கூட முன்னெடுத்திருந்த மக்கள் அன்றாடம் இவர்களின் தொழிலாக காட்டில் தேன் எடுத்தல்,விறகு வெட்டுதல்,சிறு மீன் பிடி போன்ற தொழில்களை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். பழங்குடி மக்களாகிய இவர்கள் ஒரு தேவையை நிறைவேற்ற மூதூர் பிரதேசத்துக்கு செல்வதாயின் சுமார் ஐந்து கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளதுடன் குளிப்பதற்கும் ஆடைகளை கழுவுவதற்கும் இன்னும் இதர ஏனைய தேவைகளுக்கான நீரை மிக தூரத்தில் உள்ள குளத்துக்கு செல்ல வேண்டியுள்ளது .சுத்தமான நீரின்மையால் சில வேலைகளில் இங்கிருக்கும் நீரை அருந்துவதால் சிறு பிள்ளைகளுக்கு வாந்திபேதி உட்பட ஏனைய நோய்களும் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது.

மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியது உரியவர்களின் கடமையல்லவா . “குடி நீரை பெறுவதற்காக சைக்கிளில் மிக நீண்ட தூரம் சென்று சுமக்க வேண்டியுள்ளது இதனால் கஷ்டங்களை எதிர்நோக்குகிறோம் பல தடவைகள் இது தொடர்பில் உரியவர்களுக்கு சொல்லி இருந்தோம் தீர்வு கிடைக்கவில்லை ” என அப் பகுதி கிராமவாசி ஒருவர் தெரிவித்தார். மனிதனுக்கு தேவையாக உள்ள விடயங்கள் ஆரம்பமே இப்படி பிழையாக இருந்தால் எதிர்கால சந்ததிகளின் நிலை என்னவாக இருக்கும் .அன்றாட ஜீவனாம்சத்தை கொண்டு செல்ல கஷ்டப்படும் இந்த நிலையில் முக்கிய தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என அம்மக்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

நீரின்றி வாழ்க்கை இல்லை என்ற நிலைக்குள் தள்ளப்பட்ட சீதனவெளி மக்களின் நிலையை கண்டு உதவுவார்களா எனவும் அம் மக்களின் நீண்ட கால கனவாக காணப்படுகிறது. தற்போதைய அதிக வயிலுடன் கூடிய வரட்சியான கால நிலையில் குளங்களின் நீர் மட்டங்களும் குறைவதனால் இப் பகுதி மக்களின் நிலை மோசமாகி விடும் என்ற நிலை காணப்படுகிறது.

வரட்சி காரணமாக நீரின்றி தவிக்கும் இம் மக்களை யார் தான் கண்டு கொள்வார்கள் சிறிய குழந்தைகள்,வயோதிபர்கள்,பாடசாலை செல்லும் மாணவிகளின் நிலை என்னவாக இருக்கும் என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் .தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக செல்லும் மக்கள் பிரதிநிதிகள் இவர்களின் அடிப்படை வசதியை கூட தீர்க்க முடியாது கண்டு கொள்ளாமை இருப்பது ஏன் ? மக்களின் இந்த தேவை பூர்த்தி செய்யப்பட்டு இப் பழங்குடி மக்களின் நீர் தாகம் நிறைவேற்றப்பட வேண்டும்.

Exit mobile version