Tamil News
Home செய்திகள் கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 211 பேர் கொரோனாவால் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 211 பேர் கொரோனாவால் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் 211  கோவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு  மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபீக் இன்று (26) காலை திருகோணமலையில் உள்ள அலுவலகத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போது,

கிழக்கு மாகாணத்தில் 3வது அலையில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளும் 230 மரணங்களும் ஏற்பட்டுள்ளது.

ஆகக்கூடுதலாக கடந்த  கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 157 நோயாளிகளும், கல்முனையில் 29 பேரும் அம்பாறையில் 15 பேரும் திருகோணமலையில் 10 பேரும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் தொற்று மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதை கூற முடியாது.

ஆகவே அரசாங்கத்தின் வழிகாட்டல்களை நாம் ஒவ்வொருவரும் சிறந்த முறையில் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கின்றேன்.

கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலும் ஜூலை மாத முற்பகுதியில் இருந்து தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கின்றது.

Exit mobile version