Tamil News
Home செய்திகள் கிழக்கு கரையூடாக இலங்கைக்குள் பிரவேசித்தது ‘புரெவி’ – 75 ஆயிரம் பேர் வெளியேற்றம்

கிழக்கு கரையூடாக இலங்கைக்குள் பிரவேசித்தது ‘புரெவி’ – 75 ஆயிரம் பேர் வெளியேற்றம்

“புரெவி” புயல், வடக்கின் முல்லைத்தீவுக்கும் கிழக்கின் திருகோணமலைக்கும் ஊடாக இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

புரெவி சூறாவளி அச்சம் காரணமாக கிழக்கு மாகாணத்தின் கரையோரப்பகுதிகளில் இருந்து 75,000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிகமோசமாக பாதிக்கப்படலாம் என கருதப்படும் திருகோணமலை மாவட்டத்தின் கரையோரப்பகுதிகளை சேர்ந்த மக்களை 237 தற்காலிக முகாம்களில் தங்கவைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சூறாவளி காரணமாக சில பகுதிகளி;ல் 200 மில்லிமீற்றர் மழை காணப்படலாம் என வானிலை அவதான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாளை சூறாவளி வடமேற்கு திசையில் நகரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version