Tamil News
Home உலகச் செய்திகள் காலநிலை அகதிகளுக்கு சிறப்பு விசா வழங்க ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை

காலநிலை அகதிகளுக்கு சிறப்பு விசா வழங்க ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை

வரும் ஆண்டுகளில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றத்தால் பசிபிக் தீவு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பெரிய அளவில் இடம்பெயரக்கூடும் எனக் கூறப்படுகின்றது.
அவ்வாறு பாதிக்கப்படும் பசிபிக் தீவு நாட்டவர்களுக்கு சிறப்பு விசா வழங்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆஸ்திரேலிய அரசு தற்போதே சிந்திக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
2008 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், பேரிடர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 80 சதவீத இடம்பெயர்வு ஆசிய- பசிபிக் பகுதியிலேயே நடந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறது சர்வதேச அகதிகள் சட்டத்திற்கான Kaldor மையம்.
Exit mobile version