Home செய்திகள் கல்முனை வடக்கு பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறி – சுகாஷ்

கல்முனை வடக்கு பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறி – சுகாஷ்

k4 கல்முனை வடக்கு பறிபோகுமாயின் கிழக்கின் இருப்பு கேள்விக்குறி - சுகாஷ்அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அங்கு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 34 வருடங்களாக ஒரு சுயாதீனமான பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது. ஆனால் இங்கு ஒரு தனியான பிரதேச செயலாளர் என்று ஒருவர் இல்லை. இது இலங்கையின் ஆச்சரியங்களில் ஒன்று. கணக்காளர் என்ற ஒருவர் இல்லை. கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஏதேச்சையான அதிகாரத்தினுள் சட்டவிரோத உத்தரவிற்கு கட்டுப்பட்டு தான் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் செயற்பட்டு கொண்டு இருக்கின்றது. இது அரச ஏதேச்சை அதிகாரமாகும்.

அமைச்சரவையில் ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகமானது ஒரு சுயாதீனமாக இயங்குகின்ற பிரதேச செயலகமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சரவை தீர்மானத்தை மீறி இந்த அரசானது செயற்பட்டு கொண்டிருக்கின்றது. கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செயற்பட்டு கொண்டு இருக்கின்றார். இது சட்டத்தை மீறிய செயற்பாடாகும். ஒரு அமைச்சரவை தீர்மானத்தை மீறி எவ்வாறு கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செயற்பட முடியும். இதை நாம் அனுமதிப்போமாயின் தமிழ் தேச வரைபடத்தில் இருந்து கல்முனை வடக்கு அகற்றப்படும்.

தமிழர் தாயகத்தில் இருந்து கல்முனை வடக்கு பறி போக போகின்றது. இது தான் அவர்களது சூழ்ச்சி. இது தான் அவர்களது நிகழ்ச்சி நிரல். இந்த சதிக்கு எதிராகத் தான் இந்த மக்கள் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். 14 நாட்களாக இந்த மக்கள் போராடி வருகின்றார்கள். இவர்களுக்கு இந்த நீதி கிடைக்கும் வரை மக்களோடு சேர்ந்து நாமும் போராடுவோம். இது வெறுமனே கல்மனை வடக்கின் பிரச்சினை மாத்திரம் அல்ல. தமிழ் தேசத்தின் பிரச்சினை. கல்முனை வடக்கிற்கு நீதி கேட்டு தமிழ் தேசம் திரள வேண்டும்.”

இவ்வாறு சுகாஷ் தெரிவித்தாா்.

Exit mobile version