Tamil News
Home உலகச் செய்திகள் கலிபோர்னியா காட்டுத்தீ: 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின

கலிபோர்னியா காட்டுத்தீ: 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகின

கலிபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக அங்குள்ள 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பராகியுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. இதுவரை 31பேர் பலியாகியுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கானோர் வெளியேற்றப்பட்டும் உள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ வடக்குப் பகுதியில் கடந்த வெள்ளியன்று உச்சபட்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையன்று மணிக்கு 48கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. குறிப்பாக நாபா மலைப்பகுதி மற்றும் சொனோனா கவுண்ட்டிகளில் வேகமாக காற்று வீசும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 28,000 வீடுகள், கட்டிடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

காட்டுத்தீயினால் மேற்குப் பகுதியில் பலத்த காற்று வீசி வருகின்றது. இதனால் தீயைக் கட்டுப்படுத்தும் பணிகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

5000 பேர் வசிக்கும் கேலிஸ்டோகா என்ற ஊரில் அதிக தீயணைப்பு வீரர்களும், சாதனங்களும் மீட்புப் பணிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளில் காட்டுத் தீயினால் வெப்ப அளவு கடுமையாக அதிகரித்துள்ளது. சான்பிரான்சிஸ்கோ குடாப்பகுதி முழுவதும் அடர்த்தியான புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 15 முதல் கலிபோர்னியாவில் சுமார் 40 இலட்சம் ஏக்கர் நிலங்கள் எரிந்து சாம்பராயின. அதாவது 6000 சதுர மைல்கள் அல்லது 15,500 சதுர கிலோமீற்றர்கள் எரிந்து சாம்பராயின.

அத்துடன் 80,000 பேர்வரை வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. இதுவரை 600 கட்டிடங்கள், 200இற்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.

Exit mobile version