Home செய்திகள் கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு இலங்கையர் சுட்டுக் கொலை; பொலிஸார் தீவிர விசாரணை

கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு இலங்கையர் சுட்டுக் கொலை; பொலிஸார் தீவிர விசாரணை

கனேடிய தலைநகர் ஓட்டாவாவில் வசித்துவந்த இலங்கையா்களான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை ஓட்டாவா பொலிஸார் கைது செய்தனர்.

3 8 9 கனடாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு இலங்கையர் சுட்டுக் கொலை; பொலிஸார் தீவிர விசாரணைகைது செய்யப்பட்ட சந்தேகநபர் இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குடும்பத்தினர் அண்யைிலேயே கனடாவில் குடியேறியுள்ளனர். இந்நிலையிலேயே இவ்வாறானதொரு கொடூர தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 35 வயதுடைய தர்ஷனி பன்பரநாயக்க கம வல்வே தர்ஷனி டிலந்திகா ஏகன்யகே,ஏழு வயது இனுகா விக்கிரமசிங்க, நான்கு வயதுடைய அஷ்வினி விக்ரமசிங்க, இரண்டு வயதுடைய ரின்யான விக்கிரமசிங்க, இரண்டரை மாத குழந்தையான கெல்லி விக்ரமசிங்க என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 40 வயதுடைய அமரகோன்முபியாயன்சேலா கெ காமினி அமரகோன் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த அனைவரும் இலங்கையர்கள் என ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் உறுதிப்படுத்தியது.

தந்தை உயிர் பிழைத்ததாகவும், ஆனால் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறிய உயர் ஸ்தானிகர், இலங்கையில் உறவினர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

புதன்கிழமை இரவு 11 மணியளவில் Barrhaven பகுதியில் உள்ள வீட்டிற்கு பொலிஸார் வரவழைக்கப்பட்டனர்.

இந்த மரணங்கள் உள்நாட்டு அல்லது நெருங்கிய கூட்டாளி வன்முறையின் விளைவாகும் என்று பொலிஸார் நம்பவில்லை, ஆனால் அவர்கள் இன்னும் சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவைத் தீர்மானிக்க முயற்சிக்கிறார்கள்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Exit mobile version