Tamil News
Home உலகச் செய்திகள் கடத்தலுக்காக பயன்படுத்தப்படும் மலேசியா -இந்தோனேசியா எல்லைப் பகுதிகள்

கடத்தலுக்காக பயன்படுத்தப்படும் மலேசியா -இந்தோனேசியா எல்லைப் பகுதிகள்

மலேசியா- இந்தோனேசியா எல்லைப்பகுதியாக உள்ள மலேசிய மாநிலமான Sarawak-யின் Lundu மாவட்டத்திலிருந்து Lubok Antu மாவட்டம் வரையிலான எல்லைப்பகுதி மனித கடத்தல் மற்றும் கடத்தல் வேலைகளுக்கான முக்கியப் பகுதியாக விளங்குகின்றது.
அந்த வகையில், இம்மாவட்டங்களில் உள்ள பல பகுதிகள் மட்டுமின்றி எல்லைகளின் இரு பக்கமும் உள்ள பகுதிகள் ஆட்கடத்தல் நிகழும் முக்கிய இடங்களாக உள்ளதாக Sarawak மாநில துணை முதல்வர் Jemut Masing தெரிவித்துள்ளார்.
“சில நூறு மீட்டர்கள் நடந்து வந்தாலே எல்லையைக் கடந்து கடத்தல்காரர்களும் சட்டவிரோத குடியேறிகளும் நமது பகுதிக்குள் வந்துவிட முடியும். இது ஆபத்தானது. இது சட்டவிரோத பொருட்களை கொண்டு வரவும் கொரோனா தொற்றையும் பரப்ப உதவக்கூடும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சட்டவிரோத பாதைகள் வழியாக மலேசியாவுக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத இடங்களில் செயற்கைக் கோள் தொலைத்தொடர்பு வசதிகளையும் உபயோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
Exit mobile version