Home ஆய்வுகள் ஒழுக்கம் உயர்வு தரும் – நிரூபித்த யப்பானியர்கள் – ஆர்த்தீகன்

ஒழுக்கம் உயர்வு தரும் – நிரூபித்த யப்பானியர்கள் – ஆர்த்தீகன்

கடந்த செவ்வாய்க்கிழமை(2) யப்பானில் கனெடா விமான நிலையத்தில் இடம்பெற்ற விபத்தில் ஏயர்பஸ் ரக விமானம் தீப்பற்றி எரிந்தபோதும் அதனை அதன் விமானிகள் மூவரும் அறியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

யப்பானின் விமான நிறுவனத்திற்கு சொந்தமான 516 என்ற இலக்கமுயைடய விமானம் தரையிறங்கியபோது, விமான ஓடுபாதையில் பறப்பதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த Bombardier Dash-8 என்ற சிறிய விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

Japan airbus3 ஒழுக்கம் உயர்வு தரும் - நிரூபித்த யப்பானியர்கள் - ஆர்த்தீகன்சிறிய விமானத்தில் இருந்த 6 பேரில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இந்த விமானம் திங்கட்கிழமை(1) இடம்பெற்ற பூமி அதிர்வினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிப் பொருட்களை கொண்டு செல்லவிருந்த விமானமாகும்.

இந்த விபத்தில் பயணிகள் விமானம் தீப்பற்றி எரிந்தபோது விமானத்தின் உள்ளக தொலைதொடர்பு கருவிகள் சேதமடைந்ததால் விமானிகள் விமானம் தீப்பிடித்ததை அறியவில்லை. விமானப் பணியாளர் ஒருவரே அதனை அவர்களுக்கு தெரியப்படுத்தினார்.

367 பயணிகள், 3 விமானிகள் மற்றும் 12 விமானப் பணியாளர்கள் அந்த விமானத்தில் இருந்தபோதும் எல்லோரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டது மிகுந்த ஆச்சரியங்களை ஏற்படுத்தியுள்ளது. பயணிகள் அனைவரும் அச்சமடையாது விமான பணியாளர்களின் கட்டளைகளை ஏற்று நடந்ததால் அது சாத்தியமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

யப்பான் மக்கள் ஏனைய நாட்டு மக்களைப்போலவே தமது உயிர்களை மதிக்கின்றனர். இருந்தபோதும் அவர்கள் ஒழுக்கத்தை பேணுகின்றனர் என்பதைவிட ஒழுக்கத்தை கடுமையாக மதிக்கின்றனர் என்பதே சரியானதாகும்

அவசரகால நிலைமையில் பதற்றப்படாமல், மற்றவர்களை குறைகூறாமல் தமக்கான உத்தரவுகளுக்கு கீழ்ப்பணிந்து ஒழுக்கத்தைப் பேணியதால் தான் மிகப்பெரும் தீ விபத்தில் இருந்து 382 உயிர்கள் எந்த காயங்களுமின்றி காப்பாற்றப்பட்டன. ஒரு இனத்தின் கலாச்சாரத்தை வெளிஉலகிற்கு காட்டுவது சம்பவங்களில் காணப்படும் சாட்சிகள் தான் இந்த விமான விபத்து யப்பானிய மக்களின் காலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கான சாட்சியமாகியுள்ளது.

விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேற்றப்படும்போதும் சரி அண்மையில் இடம்பெற்ற பூமி அதிர்வின்போதும் சரி யப்பானிய மக்களின் கலாச்சாரம் எவ்வாறு அவர்களின் சமூகத்திற்குள் பலமாக உள்வாங்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிந்துள்ளது.

உலகக்கோப்பைக்கான உதைபந்தாட்டப் போட்டியின் போது கூட விளையாட்டு முடிந்ததும் மக்கள் அங்கு வீசப்பட்ட குப்பைகளை எல்லாம் அகற்றி சுத்தம் செய்துவிட்டே வீட்டுக்கு சென்றிருந்தனர். எந்த ஒரு நெருக்கடியான காலத்த்தின் போதும் ஒவ்வொரு யப்பானிய பிரஜையும் பொறுமையாகவும், தன்னடக்கத்துடனும், விடாமுயற்சியுடனும் வாழப்பழக்கப்பட்டவர்கள். சவால்களை சந்திக்கும்போது அவர்கள் யாரையும் குற்றம்சுமத்த முன்வருவதில்லை இதனை நாம் அவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

367 பயணிகளை 18 நிமிடங்களில் எவ்வாறு பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் இது தான் தற்போதைய கேள்வி யப்பானின் இரண்டாவது பெரிய விமான நிறுவனத்தின் பணியாளர்களின் தகவல்களின் அடிப்படையில் அது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

அவசரகால நடவடிக்கைகளை பாடப்புத்தகத்தில் உள்ளது போலவே பயன்படுத்தினோம் என கூறியுள்ளார் அதன் பணியாளர் ஒருவர் முதலாவது விதி அச்சத்தை கட்டுப்படுத்துவது. ஏ-350 ஏயர்பஸ் விமானத்தின் அகலமான உடற்பகுதி தனது இயக்கத்தை நிறுத்தியவுடன், பயணிகளை அமைதிகாக்குமாறு பணியாளர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் அப்போது மிகப்பெரும் செஞ்சுவாலை விமானத்தின் பல பகுதிகளுக்கு பரவிக்கொண்டிருந்தது.

பயணிகள் அறைக்குள்ளும் பூகை மூட்டமாக இருந்தது. சுற்றுச்சூழல் நிகழ்வுகளை அவதானித்து அவசர நிலமைகளின் போது வெளியேறும் 8 பாதைகளில் எவை பாதுகாப்பானவை என்பதை அவர்கள் உடனடியாகவே முடிவு செய்தனர். உடனடியாகவே மிகவும் சுருக்கமான நேரிடையான கட்டளைகள் வழங்கப்பட்டன. அதற்கான பயிற்சிகளை அவர்கள் எடுத்திருந்தனர். பயணப் பைகளை எடுக்க வேண்டாம், இந்த வாசலை பயன்படுத்த வேண்டாம் என்ற கட்டளைகள் காத்திரமாக ஒலித்துக்கொண்டிருந்தன.

அதனை தப்பிவந்த பயணிகளும் உறுதிப்படுத்தியிருந்தனர். விமானப் பணியாளர்களின் அந்த துணிச்சலான மற்றும் அறிவுபூர்வமான நடவடிக்கைகளை அவர்கள் பாரட்டியும் இருந்தனர்.

நாம் அனைவரும் இறங்கிய 10 நிமிடங்களில் நான் ஒரு வெடிப்பதிர்வை கேட்டேன் என தான் மயிரிழையில் உயிர்தப்பியது குறித்து 28 வயதான ருபாசா சவேடா தெரிவித்தார். நாம் சில நிமிடங்கள் தாமதித்திருந்தாலும் இறந்திருப்போம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவசரகால கதவுகளை திறப்பதற்கு விமானிகளின் அறையின் அனுமதிகள் தேவை ஆனால் விமானத்தின் கப்டன் வெளியேறும் இரு கதவுகளுக்கும் அருகில் நின்று அதனை மேற்கொண்டிரந்தார்.

பின்னால் இருந்த 3 அவது கதவு தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக சரியாக செயற்படவில்லை. எனினும் பணியாளர்கள் சரியான முடிவை எடுத்து அதனை திறந்து பயணிகளை சறுக்கிச் செல்லுமாறு பணித்து வெளியேற்றினர். இவ்வாறான அவசரகால நிலைமைகள் தொடர்பில் பணியாளர்கள் வருடம்தோறும் பயிற்சிகளை பெறுவது வழக்கம். எனவே விமானிகளின் கட்டுப்பாட்டு அறையுடன் அவர்கள் தொடர்பகளை பேணமுடியாது விட்டாலும் அவர்களால் செயற்பட முடியும்.

மூன்று வழிகளாலும் 18 நிமிடங்களில் எல்லா பயணிகளையும் அவர்கள் வெற்றிகரமாக வெளியேற்றினர். 2015 ஆம் ஆண்டு சேவையில் இணைந்த 320 மில்லியன் டொலர்கள் பெறுமதியான ஐரோப்பாவின் எயர்பஸ் நிறுவனத்தின் ஏ-350 விமானம் சந்தித்த மிக முக்கியமான முதலாவது விபத்து இது.

பாரமற்ற கார்பன் கொம்பசிற் எனப்படும் பொருட்களால் வடிவமைக்கப்பட்ட முதாலாவது பயணிகள் விமானமும் இதுவே. எனவே தான் அது முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது. ஏ350-900 என்ற விமானம் 440 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடியது. அவசரகாலத்தில் வெளியேறும் அதன் கதவுகளில் அரைவாசி பயன்படுத்தப்பட்டாலே 90 வினாடிகளில் எல்லா பயணிகளையும் வெளியேற்றக்கூடியவாறே அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

எனவே ஏன் தற்போது 18 நிமிடங்கள் எடுத்தது என்பது தெளிவற்றது. சில சமயங்களில் பயணிகளுக்கு உதவிகள் தேவைப்பட்டிருக்கலாம். பயணிகளின் உடல் அமைப்பு மற்றும் இயங்கு தன்மைகளை கொண்டு அவர்களுக்கு அவசரகால நடவடிக்கைகளின் போது உதவிகள் தேவைப்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பாடப்புத்தகத்தில் இருந்ததை பணியாளர்கள் உறுதியாக கடைப்பிடித்துள்ளனர் என எயர்பஸ் நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தள்ளார். 8 சிறுவர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அவசரகால வெளியேற்றத்தின்போது பயணப்பைகளை எடுப்பது உயிர் ஆபத்துக்களை அதிகரிக்கும் என விமானத்துறை நிறுவனங்கள் பல வருடங்களாக தொடர்ந்து எச்சரித்து வருகின்றன. அதனை இந்த சம்பவத்தில் உறுதியாக கடைப்பிடித்துள்ளனர். அதற்கு பயணிகளும் ஒத்துழைத்துள்ளனர். அதுவே 382 பேரின் உயிரை காப்பாற்றியுள்ளது.

 

Exit mobile version