Tamil News
Home செய்திகள் ஒற்றுமை என்பது பத்தாகபிரிந்து கட்சிகளை உருவாக்குவதல்ல -பா.அரியநேத்திரன்

ஒற்றுமை என்பது பத்தாகபிரிந்து கட்சிகளை உருவாக்குவதல்ல -பா.அரியநேத்திரன்

ஒற்றுமை என்பது பத்தாகபிரிந்து கட்சிகளை உருவாக்குவதல்ல எனத் தெரிவித்துள்ள பா.அரியநேத்திரன்,ஒன்றாக நிற்பதே ஒற்றுமை என்று கூறியுள்ளார்.

வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ்தேசிய அரசியல் பயணத்தில் ஒற்றுமை என்ற பெயரில் பல கட்சிகளை பெயரளவில் ஆரம்பித்துச் செயல்படுவதை நிறுத்தி, எல்லோரும் தமிழ்தேசி கூட்டமைப்புடன் இணைந்து செயல்படுவதே உண்மையான ஒற்றுமையாகும் என இலங்கை தமிழரசு கட்சியின் ஊடக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

ஒற்றுமை முயற்சிக்கு தமிழரசு கட்சி தயாரில்லை என தமிழ்தேசிய கட்சி என்ற பெயரில் ரெலோவில் இருந்து பிரிந்து புதிய கட்சியை உருவாக்கிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீகாந்தா தெரிவித்த கருத்துத் தொடர்பாக  அரியநேத்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் தெரிவிக்கையில்,

தமிழ்தேசிய அரசியல் பரப்பில் 1944,ல் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் தோற்றம் பெற்று இதன் பின்னர் தந்தை்செல்வா 1949,ல் இலங்கை தமிழரசு கட்சியை ஆரம்பித்து வடக்கு கிழக்கு தாயகத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கு சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வுக்காக பல அகிம்சை ரீதியிலான அறவழிப் போராட்ட அரசியல் பயணங்களை முன் எடுத்தும் இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்த சிங்கள பெரும்பான்மை இனவாத அரசாங்கள் தட்டிக்கழித்தமையால் 1976,ல் தமிழர் விடுதலை கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சி தோற்றம் பெற்று வட்டுக்கோட்டை தீர்மானமாக தமிழீழ தனியரசு கோரிக்கை நிறைவேற்றப்பட்டு 1977,ல் வடக்கு கிழக்கு மக்களால் அந்த தீர்மானத்திற்கு 18, தேர்தல் தொகுதிகளில் தமிழ்மக்கள் ஆணை வழங்கினர்.

இந்த காலப்பகுதியில் மென்போக்கு அரசியல் மௌனம் அடைந்து வன்போக்கு அரசியல் மேலோங்கியது இதனால் 36, ஆயுதப்போராட்ட விடுதலை இயக்கங்கள் இளைஞர்களால் ஆரம்பமாகின.கரந்தடி தாக்குதல் போராக ஆரம்பித்து ஆயதப்போர் இடம்பெறும்வேளையில் 1987,ல் இலங்கை இந்திய்ஒப்பந்தம் இந்தியப்பிரதமர் ராஜீவ்காந்திக்கும், இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவுக்கும் கைச்சாத்தாகி 13,வது அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் நீறைவேற்றப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கு மாகாண்சபை தேர்தல் இடம்பெற்று வரதராஜப்பெருமாள் முதலமைச்சரானார்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்ட 1987,வரை 36 விடுதலை இயக்கங்களாக செயல்பட்ட 35, விடுதலை இயக்களும்  1987க்கு பின்னர் இலங்கை இராணுவத்துக்கு எதிராக்நடத்தப்பட்ட்கரந்தடி தாக்குதல்களை நிறுத்தின பல இயக்கங்கள் முற்றாக விட்டு ஒதிங்கின சில இயக்கங்கள் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து அரசியல் கட்சிகளாக மாறின.

ஆனால் தமிழீழ விடுதலை புலிகள் மட்டும் கரந்தடி்தாக்குதலாக ஆரம்பித்து மரபுப்படையணியாக்வளர்ச்சி பெற்று 1ம் கட்ட ஈழப்போர் என பிரகடணம் செய்து இந்திய அமைதிப்படைக்கு எதிரான போரை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் 2,ம் கட்டம்,3,ம்  கட்டம் 4,ம் கட்டம், என 2009, வரை இலங்கை இராணுவத்துக்கு எதிரான பல போர்களை செய்தனர் இதன்காரணமாக சர்வதேச நாட்டு படைகளின் உதவியால் 2009,மே,18, முள்ளிவாய்க்கால் அவலமும் போர் மௌனமும் ஏற்பட்டது.

1977 தொடக்கம் 2000, வரை வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ்தேசிய்மென்சக்தி ஜனநாயக அரசியல் தளம் என்பது வெளிப்படையாக இயங்கவில்லை ஆனால் 2000 ம் ஆண்டு கிழக்கு ஊடகவியலாளர ஒன்றியம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒத்துழைப்புடன் “தமிழ்தேசிய கூட்டமைப்பு”(TNA) உருவாக்கப்பட்து.

2001 தொடக்கம் 2020, ஐந்து  பாளுமன்ற பொதுத்தேர்தல்கள், இரண்டு மாகாணசபை தேர்தல்கள், அநேகமான உள்ளூராட்சி சபை தேர்தல்கள் எல்லாம் தமிழ்தேசிய கூட்டமைப்பு தேர்தல்களை சந்தித்துள்ளது இனியும் பல தேர்களை சந்திக்கும் அதே வேளையில் ஜனநாயக்ரீதியான போராட்டங்களிலும் பங்குபற்றியுள்ளது என்பதெல்லாம் அனைவரும் அறிந்த விடயங்கள்.

2010 க்கு பின்னர் விடுதலைபுலிகளின் மௌனத்திற்கு பின்னரான காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப புடன் இணைந்து செயல்பட்ட சிலர் பல காரணங்களையும் குற்றச்சாட்டுக்களையும் தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து விலகி அவர்களுக்கு விரும்பியபடி புதிய கட்சிகளை உருவாக்கினர்.

அவர்கள் உருவாக்கிய பல கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படாதபோதும் தாம் ஜனநாயரீதியான தமிழ்தேசிய அரசியல் செயல்பாடுகளை செய்துவருவதாகவும் கடந்த 2020ல் இறுதியாக இடம்பெற்ற பொதுத்தேர்தலிலும் கூட்டாகவும், தனியாகவும் களம் இறங்கிய வரலாறும் அதில் தமிழ்மக்களின் வாக்குகள் ஒற்றுமையாக பெறமுடியாமல் போனமையும் எல்லோரும் அறிந்த ஒன்றே.

2020, ஜனாதிபதி தேர்தலில் தற்போதய புதிய ஜனாதிபதியாக மாண்புமிகு கோட்டபாய பதவி ஏற்றபின்னர் இடம பெற்ற பொதுத்தேர்தல் மாற்றம் தற்போதய ஆட்சியின் பின்னர் வடக்கு கிழக்கில் ஏற்படும் பலதரப்பட்ட அடக்குமுறை, நிலபகரிப்பு, போரில்மரணித்த எமது உறவுகளை நினைவுகூரமுடியாத தடை, மேச்சல்தரை அபகரிப்பு, திட்டமிட்ட கைது தடவடிக்கை,ஜனநாயகரீதியிலான போராட்டங்களை செய்யமுடியாத தடைகள் என பல இன்னல்களை தமிழ்தரப்பு சந்திக்கும் இவ வேளையில் அனைத்து தமிழ்தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயல்படும் தேவையை தற்போதய அரசு எமக்கு பாடம் கற்பித்துள்ளது.

இது கட்டாயமாக தேவை தமிழ்தேசிய அரசியல் கட்சிகள் என புதுப்புதுப் பெயரில் இநங்கும் அனைத்துக்கட்சிகளும் ஒருகுடையில் வரவேண்டும் என்பதும் ஒன்றுணைந்து ஜனநாயக போராட்டங்களை முன்எடுக்கவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கள் இல்லை இது காலத்தின் கட்டாயமும் கூட.

ஆனால் அதற்காக இன்னும் புதியபெயர்களில் கட்சிகள் வேண்டாம் ஏற்கனவே 2002,ல் உருவாக்கபலபட்ட “தமிழ்தேசிய கூட்டமைப்பில்” இருந்து பிரிந்தவர்களே பத்து பதினொரு கட்சிகளாக வெவ்வேறு பெயர்களில் பதாதைகளை தயாரித்து கட்சிகளாக செயல்படுகினலறனர்.

உளரீதியாக தமிழ்மக்கள்மீதும் தாயக மண்மீதும், தமிழ்தேசியம்மீதும் அக்கறை இருப்பின் புதியபெயர்களில் இன்னும் தமிழ்தேசிய கட்சிகள் வேண்டாம் எல்லோரும் தமிழ் தேசியகூட்டமைப்பை பலப்படுத்துவதே சிறப்பான அரசியலாகும் என்பதே எனது கருத்து எனவும் மேலும் கூறினார்.

Exit mobile version