Tamil News
Home உலகச் செய்திகள் எமது பொருளாதார வீழ்ச்சிக்கு நாமே காரணம் – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

எமது பொருளாதார வீழ்ச்சிக்கு நாமே காரணம் – பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்

எமது நாட்டின் உள்ளக அரசியல் பிரச்சனைகளே பொருளாதார வீழ்ச்சிக்கும் நாட்டின் அழிவுக்கும் காரணம் அதற்கு இந்தியாவோ, அமெரிக்காவோ அல்லது ஆப்கானிஸ்த்தானோ காரணமல்ல என பாகிஸ்தனின் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் தெரிவித்துள்ளார்.

நாட்டின் அரசாட்சியிலும், அரசியலிலும் படையினரின் அதிக தலையீடுகNs இதற்கு காரணம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்டகாலப் பகையிருந்தாலும் தற்போதைய நிலைக்கு இந்தியாவோ அமெரிக்காவோ காரணமல்ல. நாமே எமது காலில் சுட்டுள்ளோம் என அவர் பாகிஸ்தனினின் பிரதான எதிர்கட்கட்சிகளில் ஒன்றான முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றும்போது கடந்த செவ்வாய்கிழமை(19) தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு மக்களால் தரிவுசெய்யப்பட்ட அரசை இராணுவம் கைப்பற்றியிருந்தது. 1947 ஆம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரமடைந்த பின்னர் அது மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை தற்போது சந்தித்துள்ளது.

பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை காப்பாற்றுவதற்காக அனைத்துலக நாயண நிதியம் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டொலர்களை கடனாக வழங்கியிருந்தது. அதேசமயம்இ உலக வங்கியும் 350 மில்லியன் டொலர்களை வழங்கியிருந்தது.

1993, 1999, 2017 ஆம் ஆண்டுகளில் மூன்று தடவைகள் பிரதமராக பதவி வகித்த நவாஸ் செரீப் தற்போது எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆவலாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version