Tamil News
Home உலகச் செய்திகள் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது – அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை

எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது – அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி எச்சரிக்கை

“நீங்கள் அடுத்த நான்கு வருடங்களுக்கு அமைதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் எங்களைச் சீண்டாமல் இருப்பது நல்லது என்று  அமெரிக்காவுக்கு   வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வடகொரியா,  அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் கடற்படை கூட்டுப் பயிற்சி வரும் நாட்களில் நடைபெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்க அதிகாரிகள் தென் கொரியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தனது குரலைப் பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், “நீங்கள் (அமெரிக்கா) அடுத்து வரும் நான்கு வருடங்களில் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று நினைத்தால் முதல் படியாக எங்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது” என்று கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங், கிம்முக்கு அடுத்து சக்தி வாய்ந்த நபராக அந்நாட்டில் அறியப்படுகிறார். அதிபர் கிம்மின் சொந்தத் தங்கையான கிம் யோ ஜாங் அந்நாட்டின் அதிகாரம் படைத்த அமைப்பான வடகொரியத் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகவும் முக்கியமான அரசியல் தலைவராகவும் உள்ளார்.

கிம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே, தன்னுடைய சகோதரி கிம் யோ ஜாங்குக்கு அரசியலில் முக்கியப் பொறுப்புகள் வழங்கியுள்ளார்.

Exit mobile version