Home ஆய்வுகள் உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian – ந....

உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் ‘Project Azorian – ந. மாலதி

ஐ-அமெரிக்காவின் வழங்களும் திறமைகளும் அதற்கு தேவைப்படும் போதெல்லாம் உலகை ஏமாற்றுவதில் எத்துணை திறமையாக இயங்குகின்றன என்பதை அதன் 1974 திட்டம் ஒன்றினூடாக புரிந்து கொள்ளலாம். இந்த ஏமாற்றுத் திட்டத்தின் தலைவராக பணியாற்றிய டேவ் ஷார்ப் (Dave Sharp) என்பவர் 2012 இது பற்றி ஒரு நூல் வெளியிட்டுள்ளார்.

இத்திட்டத்தின் அடிமூலம் 1969இல் நிகழ்ந்தது. அது பனிப்போர் காலம். அணு ஏவுகணைகள் தாங்கிய ஒரு சோவியத் நீர்மூழ்கி கப்பல் பழுதடைந்து கடலில் மூழ்கிவிட்டது. சோவியத் நாட்டால் எவ்வளவு முயன்றும் அதை மீட்க முடியவில்லை. நீர்மூழ்கி கப்பல் அமைதியாக கடலின் அடியில் கிடந்தது. அப்போது தான் ஐ-அமெரிக்கா அதை மீட்டு அதிலிருந்த சோவியத் அணு ஏவுகணை தொழில்நுட்பத்தைப் பற்றி அறிந்து கொள்ள முடிவு செய்தது.300px Soviet ballistic missile submarine K 129 உலகை ஏமாற்றும் ஐ-அமெரிக்க வித்தை; 500 மில்லியன் டொலர்கள் செலவில் 'Project Azorian - ந. மாலதி

இப்பனிப்போர் காலத்திய கதை சில வாசகர்களுக்கு ஆர்வத்தை தூண்டலாம். ஆனால் இந்த ஆக்கத்தின் நோக்கம் வாசகர்களின் அக்கதை ஆர்வத்தை திருப்தி படுத்துவதல்ல. மாறாக உலகை ஏமாற்றுவதற்கு ஐ-அமெரிக்கா வைத்திருக்கும் திறமைகளையும் வளங்களையும் சுட்டிக்காட்டுவதே இங்கு நோக்கம். இது பனிப்போர் காலத்துடன் சம்பந்தப்பட்டது என்பதால் இதுபற்றி வெளிப்படையாக இப்போது பேசப்படுகிறது. இதே திறமையை ஐ-அமெரிக்கா வேறு சந்தர்ப்பங்களில் கையாளுவது இத்துணை வெளிப்படையாக பேசப்படாது என்பதும் உண்மை. அதனாலேயே இச்சம்பவம் கவனிக்கப்பட வேண்டிய உண்மையாகிறது.

உலகையும் அதனூடாக சோவியத் நாட்டையும் ஏமாற்றுவதற்கு ஐ-அமெரிக்கா போட்ட திட்டத்தை பற்றி இப்போது பார்ப்போம். சோவியத் நீழ்முழ்கி கப்பல் 5 கிலோமீட்டர் ஆழத்தில் கடலின் அடியில் கிடக்கிறது. அக்காலத்தில் கடலின் அடியில் அகழ்வு (mining) செய்வது என்பது ஒரு புதிய விடயம். சோவியத் நீழ்முழ்கி கப்பலை மீட்டெடுப்பதற்கு ஐ-அமெரிக்கா “க்ளோமோர்” (Glamor Explorer) என்று பெயர் சூட்டப்பட்ட ஒரு பெரிய அகழ்வாய்வு கப்பலை கட்டியது. வெளிப்படையாக அதற்கு அகழ்வாய்வு செய்வதற்கான உபகரணங்களையும் பொருத்தியது. அதே நேரம் சோவியத் நீர்மூழ்கி கப்பலை கவ்வி எடுத்து கப்பலின் அடியில் போடக்கூடிய வழிகளையும் இரகசியமாக க்ளோமர் கப்பலுக்கு பொருத்தியது. இத்திட்டத்தின் செலவு 500 மில்லியன் டொலர்கள். சந்திரனுக்கு ஒரு ரொக்கட் செலுத்துவதற்கும் இதேயளவு செலவுதான்.

இத்திட்டத்தை இரகசியமாக வைத்திருக்க ஐ-அமெரிக்கா வேறென்னவெல்லாம் செய்தது? கடலுக்கடியில் அகழ்வாய்வு என்பதை நம்பவைக்க ஒரு பெரும் செல்வந்தரான ஹாவார்ட் ஹயூஸ் என்பவரே இத்திட்டத்தை செய்கிறார் என்று பறைசாற்றியது. அவரும் இதற்கு ஒத்துழைத்தார். இப்பொய்யை மேலும் உண்மையாக்குவதற்கு பல கடல் அகழ்வாய்வு பற்றிய தொழில்நுட்ப வல்லுனர்களை உலகெங்கும் இதுபற்றி நடந்த ஆய்வுக்கூட்டங்களுக்கு அனுப்பி வைத்தது. இவ்வல்லுனர்களும் இக்கூட்டங்களில் தமது கடல் அகழ்வாய்வு பற்றிய திட்டங்களையும் எவ்வாறு தாம் கடலுக்கடியில் இருந்து கனிமங்களை அகழ்வு செய்வோம் என்பது பற்றி ஆழமாக விபரித்தார்கள்.

”கடல் அகழ்வு உண்மையாக நடக்கும் என்று நாம் உலகை நம்ப வைத்தோம். இப்பொய்யும் பல வருடங்களுக்கு உண்மை என்று நம்பப்பட்டது ஆச்சரியம்தான்” என்கிறார் டேவ் ஷார்ப்.

ஐ-அமெரிக்க பல்கலைக்கழகங்களும் இப்பொய்யான உண்மையை நம்பி கடல் அகழ்வு பற்றி சில பாடங்களை கற்பிக்க தொடங்கினார்கள். இத்திட்டத்தில் சம்பந்தப்பட்ட கம்பனிகளின் பங்கு சந்தை பெறுமதிகளும் உயர்ந்தன. பொய்யான உண்மையை உண்மையை நிரூபிக்க      (டேல் ஷார்ப் – திட்டத்தில் ஈடுபட்டவர்)      சில கனிம கற்களும் சேகரிக்கப்பட்டன.

உண்மை வெளிப்பட்டதும் கடல் அகழ்வு செய்யும் திட்டங்கள் போட்டுக்கொண்டிருந்த கம்பனிகளுக்கும், சர்வதேச கடல்பரப்பை கடல் அகழ்வு செய்வதற்கான உரிமைகளைப்பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்த ஐநாவுக்கும் பெரும் அதிர்ச்சி.

 

 

பங்கு சந்தை விலையும் வீழ்ச்சியடைந்தது. எல்லோரும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டினார்கள். இது நடந்தது 70களில். இந்த அதிர்ச்சி காரணமாக கடல் அகழ்வு பற்றிய சிந்தனைகள் பல தசாப்தங்களுக்கு முடங்கி கிடந்ன.

இன்று நிலப்பரப்பில் கனிம அகழ்வுகள் உலகெங்கும் பல கோடி மக்களின் நிலத்தையும் வாழ்வையும் சிதைத்துவிட்டன. நிலப்பரப்புகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. இப்போது கடல் பிராணிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது. ஏனெனில் இன்று கடல் அகழ்வு உண்மையாகவே துரிதகதியில் எங்கும் நடக்கப்போகிறது.

 

அமெரிக்கத எவ்வாறு இதே திறமைகளையும் வளங்களையும் ஈழத்தமிழர் போன்ற மக்களின் நேர்மையான போராட்டதை கொடூரமானது என்று சித்தரித்து உலகை நம்ப வைக்கிறது என்பதே இங்கு கவனிக்கப்பட வேண்டும்.

 

Exit mobile version