Tamil News
Home உலகச் செய்திகள் உலகில் 9.80 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

உலகில் 9.80 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9.80 கோடியைக் கடந்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.

கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா ஆகியவை முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில்,   இதுவரை 20.97 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 2.55 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.11 இலட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Exit mobile version