Tamil News
Home உலகச் செய்திகள் ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு பிரதிநிதிகள் சபையில் எதிர்ப்பு

ஈரான் மீது போர் தொடுக்கும் தீர்மானத்திற்கு எதிராக பிரதிநிதிகள் சபையில் வாக்களிக்கப்படும் என அமெரிக்க சபாநாயகர் நான்சி தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழலில் பதற்றத்தை தணித்து, அமெரிக்க மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான எந்த திட்டமும் தம்மிடம் இல்லை என்று ஜனாதிபதி டிரம்ப் கூறியுள்ளதையடுத்து ஜனநாயக கட்சியினர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

1973 ஆம் ஆண்டு போர் அதிகாரச் சட்டத்தின் கீழ் அமெரிக்க நிருவாகம் முக்கிய இராணுவ நடவடிக்கைகள் குறித்து முன்னதாக சபைக்கு அறிவிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.  ஆனால், டிரம்ப் வழக்கத்திற்கு மாறாக, ஈராக்கில் இருந்தபோது சக்தி வாய்ந்த ஈரானிய ஜெனரல் சுலைமானியை கொன்ற தாக்குதலை நியாயப்படுத்தி உள்ளார் எனவும் சபாநாயகர் கூறியுள்ளார்.

எம்.பி.க்களுடன் நடந்த சந்திப்பில் போர் குறித்த அச்சத்தை நீக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தவறி விட்டதாகவும் ஜனநாயகக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

1973-ல் கொண்டுவரப்பட்ட போர் அதிகாரச் சட்டங்களின் படி, பெரிய யுத்த நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை எனவும் சபாநாயகர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிநிதிகள் சபையில் தோற்றாலும், செனட் சபையில் டிரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகின்றது

Exit mobile version