Home செய்திகள் இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்

இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்

bavatharani இளையராஜாவின் மகள் பவதாரணி இலங்கையில் காலமானார்இளையராஜாவின் மகளும், பிரபல பின்னணிப் பாடகியுமான பவதாரணி இன்று மாலை காலமானார்.

புற்றுநோய்க்காக இலங்கை வந்து சிகி்ச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே இன்று மாலை 5.20 மணியளவில் அவா் மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவரின் இறப்பு திரைதுறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவர் ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைக்காக இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில், இலங்கையில் இன்று மாலை அவா் காலமாகியுள்ளார். கடந்த 5 மாதங்களாக உடல் நல பிரச்சனையில் இருந்தவர்.

இவரது உடல் நாளை மாலை சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.

Exit mobile version