Tamil News
Home செய்திகள் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழு இன்று கூடுகின்றது

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயல் குழு இன்று கூடுகின்றது. எனினும், இன்றைய கூட்டத்தில் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரியவருகின்றது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய குழுக்கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை வவுனியாவில் நடைபெறுவதாக இருந்தது. தமிழ் அரசுக் கட்சி தொடர்பில் திருகோணமலை நீதிமன்றில் நடக்கும் வழக்கு தொடர்பான விடயங்கள், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான விவகாரம் குறித்து இந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது.

ஆனால், அந்தக் கூட்டம் இறுதிநேரத்தில் இரத்தானது. இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை இந்தக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், இன்றைய தினம் இந்துக்கள் இறந்த தமது தாயாருக்காக விரதமிருக்கும் சித்திரா பௌர்ணமி தினம் என்பதால் பல உறுப்பினர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கட்சியின் தலைமைக்கு அறிவித்துள்ளனர் என்று தெரிய வருகின்றது.

எனினும், திருகோணமலை நீதிமன்றில் நாளை புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு வருவதால் முன்னதாகவே மத் திய குழுவைக் கூட்டி ஆராய்வதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், இன் றைய தினம் மத்திய குழுவை கூட்டுவ தற்கு முடிவு செய்யப்பட்டதாக அறிய வருகின்றது.

இந்தக் கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. எனினும், இந்தக் கூட்டமும் சிலவேளைகளில் நடை பெறாது போக வாய்ப்புள்ளது என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version