Tamil News
Home செய்திகள் இலங்கைக்கும் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தும் கூட்டம்

இலங்கைக்கும் – ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையில் உறவுகளை வலுப்படுத்தும் கூட்டம்

இலங்கைக்கும்- ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளை மீளாய்வு செய்து உறவுகளை பலப்படுத்தும் கூட்டம் ஒன்று அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இடம்பெறவுள்ளதாக இலங்கை அரச தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கை தூதுவர் கிறேஸ் ஆசீர்வாதம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆசிய பசுபீக் பிராந்தியத்திற்கான உதவி பணிப்பாளர் பாவோலா பம்பலொனியுடன் மேற்கொண்ட சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியல், சட்டஒழுங்கு, நல்லாட்சி, மனித உரிமைகளின் மேம்பாடு மற்றும் பொருளாதார மேம்பாடு தொடாபில் ஐரோப்பிய ஒன்றியம் திருப்தி தெரிவித்துள்ளதாக ஆசீர்வாதம் தெரிவித்துள்ளார். இரு தரப்பினரும் இது தொடர்பில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மேம்படுத்துவது தொடர்பில் ஆய்வு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் வளைய கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இலங்கை எடுத்துள்ள நிலையில் அமைச்சர்களின் கூட்டத்தில் இலங்கை முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என பம்பலொனி தெரிவித்துள்ளார்.

Exit mobile version