Tamil News
Home உலகச் செய்திகள் இராமர் பாலத்தின் தோற்றம் குறித்து   ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல்   

இராமர் பாலத்தின் தோற்றம் குறித்து   ஆய்வு நடத்த மத்திய அரசு ஒப்புதல்   

இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் மன்னாருக்கும் இடையே அமைந்துள்ள  48 கிலோமீட்டர் நீளம் கொண்ட இராமர் பாலம், பல மர்மங்களை தன்னுள் உள்ளடக்கியுள்ளது.

 இலங்கை அரசன் இராவணனால் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்கச் சென்றபோது கடலை கடந்து செல்வதற்காக இந்த பாலம் அமைக்கப்பட்டது என்றும் இராமருக்காக வானர படையினர் அந்த பாலத்தை கட்டியதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.

எனவே இந்த இராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என சுப்ரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இராமர் பாலம் எப்போது உருவானது, எப்படி உருவானது என்பது குறித்த தொல்லியல் ஆய்வு நடத்த இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

Exit mobile version