Tamil News
Home செய்திகள் இராணுவத் தளபதி நியமனம் , இலங்கை  இறையாண்மைக்குட்பட்டது, தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது ;ஐநாவின் முகத்தில்...

இராணுவத் தளபதி நியமனம் , இலங்கை  இறையாண்மைக்குட்பட்டது, தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது ;ஐநாவின் முகத்தில் அறைந்த அஸீஸ்

உள்நாட்டு முடிவுகள் தொடர்பாக வெளிநாடுகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெனிவாவுக்கான இலங்கை பிரதிநிதி ஏ.எல்.ஏ அஸீஸ் தெரிவித்துள்ளார்

உள்ளக நிர்வாக செயல்முறைகளை பாதிக்கும் வகையில், இலங்கையின் பொது சேவை பதவிஉயர்வுகள், முடிவுகளில் வெளிப்புற தெரிவித்த அவர் வெளிப்புற சக்திகளின் தலையீடுகள் தேவையற்றவை  அவ்வாறான தலையீடுகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்றும் கூறினார்.

ஜெனிவாவில் நடந்து வரும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமை குறித்து, இணை அனுசரணை நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கவலை வெளியிட்டிருந்தன.

குற்றச்சாட்டுக்குள் உள்ளாகியிருக்கும் ஒருவர், இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையானது  நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் முயற்சிகளை பாதிக்கும் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிலையில், ஏ.எல்.ஏ அஸீஸ் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து நேற்று (11) பேரவையில் பேசினார்.

அப்போது, “அண்மையில் இராணுவத் தளபதி நியமனம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவு, இலங்கை ஜனாதிபதியின்  இறையாண்மைக்குட்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், சில இரு தரப்பு பங்காளிகள் மற்றும் சர்வதேச நிறுவனங்கள் இந்த நியமனம் குறித்து கவலைக்குரிய நிலைப்பாட்டை எழுப்புவது வருந்தத்தக்கது. இயற்கை நீதிக்கான கொள்கைகளுக்கு முரணானது” என, ஏ.எல்.ஏ அஸீஸ் கவலை வெளியிட்டார்.

Exit mobile version