Tamil News
Home செய்திகள் இந்தியாவே சிறீலங்கா அரசியலை அடிக்கடி மாற்றியது – கொலம்பகே

இந்தியாவே சிறீலங்கா அரசியலை அடிக்கடி மாற்றியது – கொலம்பகே

முன்னர் ரணில் அரசை ஆதரித்த இந்தியா, பின்னர் கோத்தபாயவை ஆதரித்தது, பூகோள அரசியல் நெருக்கடிகளால் இந்தியா தனது முடிவை அடிக்கடி மாற்றயதாக சிறீலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சரும் முன்னாள் கடற்படை தளபதியுமான அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

மகிந்த ராஜபக்சா அரசு சீனாவின் பக்கம் செல்லும் நிலைகண்டு பதறிய இந்தியா 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது. ஆனால் புதிய அரசு அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருடங்களுக்கு சீனாவுக்கு வழங்கியதை தொடர்ந்து இந்தியா மீண்டும் கோத்தபாயாவை ஆதரித்தது.

சிறீலங்காவின் முடிவு தவறானது என இந்தியா அமெரிக்கா, யப்பான் ஆகிய நாடுகள் கருதின. தற்போது இந்தியாவுக்கும் கோத்தபாயாவுக்கும் இடையில் நல்ல உறவு உள்ளது.

மேற்குலகத்தின் நகர்வுகளுக்குள் சிக்காது ஆசியக் கண்டம் மீது நாம் அக்கறை செலுத்தவுள்ளோம். பங்களதேசம் ஒரு தூங்கும் புலி, அதன் பொருளாதார வளர்ச்சி அதிகமாகி வருகின்றது. நாம் அதனுடன் நல்ல உறவுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். எனவே முக்கிய நாடுகளுக்கு நல்ல இராஜதந்திரிகளை தூதுவர்களாக நியமிக்க வேண்டும்.

நாம் இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியவாறு சீனாவை ஆதரிப்போம், பாகிஸ்தானையும் ஆதரிப்போம், ஏனெனில் 2000 ஆம் ஆண்டு யாழ் குடாநாடு விடுதலைப்புலிகளின் கைகளில் விழும் நிலையில் இருந்தபோது பாகிஸ்தான் தான் பல்குழல் உந்துகணை செலுத்திகளை வழங்கி எம்மை காப்பாற்றியது.

தனது போர் முனைகளில் இருந்த ஆயுதங்களை அவசரமாக அகற்றி விமானம் மூலம் எமக்கு விநியோகித்திருந்தது. அது தான் யாழ் குடாநாட்டை தக்கவைத்தது. அது போற்றத்தக்கது. எனவே நாம் எல்லா நாடுகளுடனும் நட்பாக இருக்க முயற்சி செய்வோம் என தெரிவித்துள்ளார்.

Exit mobile version