Tamil News
Home செய்திகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் சீனாவுடன் உறவுகளைப் பேணுவோம் – அநுரகுமார திஸாநாயக்க

இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லாமல் சீனாவுடன் உறவுகளைப் பேணுவோம் – அநுரகுமார திஸாநாயக்க

“தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான எந்தவொரு விடயத்தையும் செய்யாது. ஆனால், சீனாவுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகள் பேணப்படும்” என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழுவொன்று அண்மையில் இந்தியாவுக்குக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டிருந்தது.

இந்தப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அனுரகுமார திஸாநாயக்க, “கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தருமாறு அழைப்பு கிடைக்கப்பெற்றது. அதன் பிரகாரமே எமது பயணம் அமைந்தது. இருப்பினும் டிசம்பரில் எங்களுக்கு வேறு அழைப்புகளும் இருந்தன. எமது கட்சியில் ஒருவர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் சீனாவுக்குச் சென்றிருந்தார். எங்கள் வெளியுலக உறவுகளில் முழு வெளிப்படைத்தன்மையைப் பேணுகிறோம் என இந்தியாவிடம் தெரிவித்தோம்” என்று தெரிவித்தாா்.

மேலும் கருத்து வெளியிட்ட அநுரகுமார திஸாநாயக்க, “தேசிய மக்கள் சக்தி அணிசேரா வெளியுறவுக் கொள்கையை கடைபிடிக்கிறது. வெளிப்படைத்தன்மையுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விவகாரங்களில் ஈடுபடுவதே எமது நோக்கம்.

தூதரகங்களின் செயல்பாடுகளில் அடிக்கடி கலந்துகொள்ளும் சில நபர்கள் எங்களைப் பற்றிய தவறான தகவல்களை பரப்புகிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம். இந்த எல்லா நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ள எங்களுக்கு உண்மையில் நேரம் இல்லை. எவ்வாறாயினும், சமீபத்திய மாதங்களில், தூதரக அதிகாரிகள் எங்களைத் தொடர்பு கொண்டுள்ளனர்” என்றும் தெரிவித்தாா்.

Exit mobile version