Tamil News
Home செய்திகள் இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் மேலதிக விளக்கம் கோரும் டெல்லி

இந்தியாவில் விடுதலைப் புலிகள் தடைச்சட்டம் மேலதிக விளக்கம் கோரும் டெல்லி

இந்தியாவில் சட்டவிரோத நடவடிக்கைச் சட்டத்தின் கீழ் 1987 ஆம் ஆண்டு முதல் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இந்த தடைச்சட்டத்தை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.

இதேவேளை இந்த இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்க போதிய காரணம் உள்ளதா என்பது பற்றி விசாரணை செய்வதற்காக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சங்கீதா திங்ரா சேகல் தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இந்த நடுவர் மன்றம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத இயக்கமாக அறிவிக்கக் கூடாது என்று கோரியுள்ளனர்.

இது தொடர்பாக விளக்கம் அளிக்க ஜுலை 26ஆம் திகதி வரை அவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version