Home செய்திகள் இந்தியாவுக்கு எண்ணை ஏற்றிச்சென்ற கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவுக்கு எண்ணை ஏற்றிச்சென்ற கப்பல் மீது தாக்குதல்

இந்தியாவுக்கு சவுதி அரேபியாவில் இருந்து எண்ணையை ஏற்றிச்சென்ற கப்பல் மீது இந்தியாவின் கரையில் இருந்து 200 கடல் மலைகள் தொலைவில் வைத்து ஆளில்லாத தாக்குதல் விமானங்கள் மூலம் ஏமன் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் கப்பல் சேதமடைந்துள்ளது.

எனினும் அதில் பணியாற்றிய 21 பணியாளர்களும் காயங்கள் இன்றி பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. லைபீரியாவின் கொடியுடன் பயணித்த யப்பான் நாட்டுக்கு செந்தமான கெம் புளுடோ என்ற எண்ணைத்தாங்கி கப்பலே சனிக்கிழடை தாக்குதலுக்கு உள்ளானதான தெரிவிக்கப்படுகின்றது.

India Pluto6 இந்தியாவுக்கு எண்ணை ஏற்றிச்சென்ற கப்பல் மீது தாக்குதல்இந்த தாக்குதலை ஈரானே மேற்கொண்டாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்ரகனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அதனை உறுதிப்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அளில்லாத தாக்குதல் விமானம் ஈரானின் கடற்படை கப்பலில் இருந்து ஏவப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அது தொடர்பில் ஈரான் கருத்துக்களை இதுவரை தெரிவிக்கவில்லை. தாக்குதலுக்கு உள்ளன கப்பலை இந்தியாவின் கரையோக காவல்படையினரின் கடற்படை கப்பல்கள் உலங்குவானூர்திகளின் உதவியுடன் இந்திய துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே, நெதர்லாந்தின் எசிஈ என்ற நிறுவனம் யப்பானின் இந்த கப்பலலை வாடகைக்கு எடுத்திருந்ததாக சில தகவல்களும், இஸ்ரேலிய நிறுவனம் அதனை நிர்வகித்துவருவதாகவும் சில தகவல்களும் தெரிவிக்கின்றன.

அண்மைக்காலமாக செங்கடல் ஊடாக பயணம் மேற்கொள்ளும் இஸ்ரேலிய மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான கப்பல்களை ஹதீஸ் அமைப்பினர் தாக்கி வருகின்றனர். இந்த தாக்குதல் காரணமாக 100 இற்கு மேற்பட்ட கப்பல்கள் இந்த பாதையை தவிர்த்து தென்னாபிரிக்கா வழியாக சுற்றி செல்கின்றன.

6 இற்கு மேற்பட்ட கப்பல் நிறுவனங்கள் செங்கடல் ஊடாக பயணத்தை தவிர்த்துள்ளதாக அறிவித்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இதனால் கப்பல் நிறுவனங்கள் 80 பில்லியன் டொலர்களை இழந்துள்ளன.

செங்கடலின் ஊடாக பயணிப்பதற்கு 8,500 மைல்கள் தூரமும், தென்னாபிரிக்கா வழியாக பயணிப்பதற்கு 11,500 மைல்கள் தூரமும் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தற்போது இடம்பெறும் பாலஸ்த்தீன – காசா போரில் இந்தியா இஸ்ரேலை ஆதரிப்பது தான் இந்த தாக்குதலுக்கான காரணமாக இருக்கலாம் எனவும் கருதப்படுகின்றது.

அது உண்மை என்றால் இந்தியாவின் எண்ணை வர்த்தகத்திற்கு மிக்கப்பெரும் தாக்கத்தை இந்த தாக்குதல் ஏற்படுத்தும் என்பதுடன் அது பொருளாதாரத்தையும் பாதிக்கலாம்

Exit mobile version