Home உலகச் செய்திகள் இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு

இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு

இத்தாலியின் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌

இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரம் பாம்பேய். இங்கு கி.பி 79-ல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டுள்ளது.

அந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடியுள்ளது.

Pompeii chariot 1 AP இத்தாலியில் பழமையான தேர் கண்டுபிடிப்பு

இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருக்கிறது. இந்த நிலையில் பாம்பேய் நகரில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‌

4 சக்கரங்களைக் கொண்ட இந்தத் தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. பாம்பேய் நகரின் வடக்கு பகுதியில் உள்ள சிவிட்டா கைலியனா எனும் பழங்கால மாளிகையின் முற்றத்தில் இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஜனவரி 7-ம் திகதி இந்தத் தேர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல வார காலம் ஆனது என அகழ்வாய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Exit mobile version