Tamil News
Home உலகச் செய்திகள் “இது என் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்” முக நுாலில் பதிவிட்ட மருத்துவர் கொரோனாவுக்கு பலி!

“இது என் கடைசி காலை வணக்கமாக இருக்கலாம்” முக நுாலில் பதிவிட்ட மருத்துவர் கொரோனாவுக்கு பலி!

“இது கடைசியாக நான் சொல்லும் காலை வணக்கமாக இருக்கலாம். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது போகலாம்“ என  கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது முக நுாலில் பதிவிட்ட இந்திய பெண் மருத்துவர் மறுநாள் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் அலையை இந்தியா எதிர்கொண்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பதால், பல மாநிலங்களும் சமாளிக்க முடியாமல் திணறுகின்றன.

இந்தியாவிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசம்தான், தற்போது அதிகமாக பதிக்கப்பட்டுள்ள மாநிலம் ஆகும்.

மேலும் இந்தியாவின்  146 மாவட்டங்களில்  கொரோனா வைரஸ் பரவும் வேகம்,15 வீதம் ஆகவும் 274 மாவட்டங்களில் 5-15 வீதமாகவும் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையயில், மும்பை – சிவ்ரி பகுதியில் அரச காசநோய் மருத்துவமனையில் சிரேஷ்ட மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்த 51 வயதான மனிஷா ஜாதவ் என்பவர்  “நான் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளேன். இது கடைசியாக நான் சொல்லும் காலை வணக்கமாக இருக்கலாம். இதன்பின்னர் உங்களை நான் சந்திக்க முடியாது போகலாம். எல்லோரும் கவனமாக இருங்கள். உடல் அழிந்து விடும். ஆனால் ஆன்மா அழியாது” என தனது முக நுாலில்  பதிவிட்ட மாறு நாள் மரணமடைந்துள்ளார்.

அண்மையில் கடுமையான கொரோனா அறிகுறிகளால் பாதிக்கப்பட்ட இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து மும்பை – காந்திவலியில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த திங்கட்கிழமை  மருத்துவர் மனிஷா ஜாதவ் உயிரிழந்தார்.

இந்தியாவின்  மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளாகி 168 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version