Tamil News
Home உலகச் செய்திகள் ஆபிரிக்காவில் 650,000 சிறுவர்களுக்கு மலேரியா தடுப்பு மருந்து

ஆபிரிக்காவில் 650,000 சிறுவர்களுக்கு மலேரியா தடுப்பு மருந்து

மலேரியா நோக்கு எதிராக புதிதாக தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து ஆபிரிக்க நாடுகளில் உள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில்  உலக சுகாதார நிறுவனம் இந்த வாரம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கானா, கென்யா மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் உள்ள 1.7 மில்லியன் மக்களுக்கு தடுப்பு மருந்து போடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் 650,000 சிறுவர்களும் பலனடைந்துள்ளனர். இரண்டு வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மூலம் இந்த எண்ணிக்கை எட்டப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு 229 மில்லியன் மக்கள் மலேரியாவினால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 400,000 மரணமடைந்திருந்தனர், மரணமடைந்தவர்களில் 265,000 பேர் சிறுவர்கள். இவர்களில் 90 விகிதமானவர்கள் ஆபிரிக்க நாடுகளிலேயே இறந்துள்ளனர் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version