Home செய்திகள் தேசிய கல்வியியற் கல்லூரி விடுதியில் இருந்து ஆசிரியர்,மாணவர்கள் வெளியேற்றம்?

தேசிய கல்வியியற் கல்லூரி விடுதியில் இருந்து ஆசிரியர்,மாணவர்கள் வெளியேற்றம்?

யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 ஆசிரிய மாணவர்கள் (71 ஆண் 304 பெண்)  தமது வீடுகளுக்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டனர்.

யாழ்.கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவுள்ளதன்காரணமாக மாணவர்களை அவர்களது வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

fd1bb67a 598d 4ff7 ac25 ed5cbdf5a2f5 தேசிய கல்வியியற் கல்லூரி விடுதியில் இருந்து ஆசிரியர்,மாணவர்கள் வெளியேற்றம்?

அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனயான பேருந்துகளில் ஏற்றப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

இன்று காலையில்  சுமார் எட்டு பேருந்துகளில் மாணவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ள்ளார்கள். அடுத்து  குறித்த கல்லூரியை தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றும் நடவடிக்கைகள் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளது

Exit mobile version