Tamil News
Home உலகச் செய்திகள் ஆசிய, அமெரிக்க பறவைகள் எண்ணிக்கை வீழ்ச்சி பற்றி எச்சரிக்கும் ஆய்வுகள்

ஆசிய, அமெரிக்க பறவைகள் எண்ணிக்கை வீழ்ச்சி பற்றி எச்சரிக்கும் ஆய்வுகள்

ஆசியா மற்றும் அமெரிக்காவில் பறவைகளின் இனத்தொகையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இரண்டு முக்கிய ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

அமெரிக்கா மற்றும் கனடாவில் 1970 காலகட்டத்தை ஒப்பிடும் போது தற்போது வட அமெரிக்க வகை பறவைகளின் எண்ணிக்கையில் 3 பில்லியன் அதாவது ஏறக்குறைய 29 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முதலாவது ஆய்வு தெரிவித்துள்ளது.

ஜாவா மற்றும் இந்தோனேசியாவில் ஆசிய பாடும் பறவைகள் எண்ணிக்கை குறைபாடு தொடர்பான பிரச்சினையை அழுத்தமாக சுட்டிக்காட்டிய இரண்டாவது ஆய்வு, தற்போது அதிக அளவில் பறவைகள்  அதன் இயல்பான சூழலில் வாழவிடாமல் கூண்டில் அடைக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் கண்டுபிடிப்புக்கள் ஓர் முக்கிய எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

உயிரியல் பாதுகாப்பு மற்றும் ஜர்னல்ஸ் சயின்ஸ் ஆகிய முக்கிய அறிவியல் சார்ந்த பத்திரிகைகளில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

விளை நிலங்கள், சமவெளிகள், பாலைவனங்கள் என வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த பறவைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை இந்த ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அனைத்து பகுதிகளும் பறவைகளின் இயல்பான சூழலை குழப்பும் வண்ணம் மனிதர்களால் வாழ இயலாத இடங்களாக மாற்றப்பட்டு வருவதாகவும், அதனால் இந்த இடங்களை அந்நிய பகுதிகளாக, கிரகங்களாக இந்தப் பறவைகள் கருதும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version