Tamil News
Home உலகச் செய்திகள் அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு

அவுஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வைரஸ் பாதிப்பு

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் கொரோனா டெல்டா திரிபால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு பிராந்தியம், குயீன்ஸ்லாந்து, மேற்கு அவுஸ்திரேலியா ஆகியவற்றிலும் சிலருக்கு இந்த வகை திரிபின் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் ஒரே நேரத்தில் பல்வேறு பகுதிகளில் பாதிப்புகள் பதிவாவது இதுவே முதல் முறை. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் மாகாண தலைவர்கள் இன்று அவரச ஆலோசனையில் ஈடுபடவுள்ளனர்.

கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் அவுஸ்திரேலியா மிகவும் முக்கியமான கட்டத்தில் இருப்பதாக  நிதித்துறை அமைச்சர் ஜோஷ் ஃபிரைடன்பெர்க் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே அவுஸ்திரேலியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக பல்வேறு மாகாண எல்லைகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான கட்டுப்பாடுகளும் அமலில் உள்ளன. இருந்தபோதும், கொரோனா பெருந்தொற்றின் புதிய கட்டமாக மிகவும் ஆபத்தான டெல்டோ திரிபை நாடு எதிர்கொண்டுள்ளதாகக் கருதுவதாக ஃபிரைடென்பெர்க் கூறியுள்ளார்.

Exit mobile version